X
வட்டகரா

வட்டகரா

Drama | 05 Aug 2022 |
Tamil

2.5 /5 Users

0 /5 Filmibeat

வட்டகரா கதை

சதீஷ் சுப்பிரமணியம் நடிப்பில் வெளியாக்கிருக்கின்ற படம் '  வட்டகரா  ' IMF தயாரித்து  கே.பாரதி கண்ணன் இயக்கிய இந்த படம் திரையரங்குகளில் நேரடியாக வெளியாகியுள்ளது. வட்டகரா திரைப்படம் ஒரு புதுமையான நோக்கில் எடுக்கப்பட்டிருக்கும் படம். பொதுவாக திரைப்படம் என்பது ஒரு கதாநாயகன் கதாநாயகி இருவரின் காதலுக்கு எதிர்ப்பு வாழ்க்கையை பின்னிப் புனைவதாக தான் அமையும். ஆனால் இந்த படத்தில் அப்படிப்பட்ட ஒரு கதை அமைப்பு இல்லை. இந்த படத்தின் கதை அமைப்பு வித்தியாசமாக அமைந்திருக்கிறது. சாதாரணமாக இன்றைய நடைமுறையில் உள்ள விதிகளை புறம் தள்ளி புதிய விதிமுறையில் உட்பட்டு இந்த படம் தயாரிக்கப்பட்டு இருக்கிறது, அதுவே இயக்குனர் பாரதி கண்ணனுக்கு பெருமையை சேர்க்கும். நான்கு பேர் அவர்குளுடைய நியாயமான கோரிக்கைக்காக பணம் தேவைப்படுவதால், அந்தப் பணத்தை எப்படி திரட்டுவது அதற்காக திட்டம் பின்னப்படுகிறது. திட்டத்தின் படி பொது வங்கிகளிலோ, பொது நிறுவனங்களிலோ கொள்ளை அடிக்கக் கூடாது, ஆனால் எவன் கொள்ளையடித்து வைத்திருக்கிறானோ அவனிடமிருந்து கொள்ளையடிக்க வேண்டும் என்கிற ஒரு நல்ல நோக்கத்தில் நான்கு பேரும் செயல்படுகின்றனர். அந்த நான்கு பேருக்கும் பணத்தின் தேவைக்கான பின்புற காட்சிகள் அருமையாக சித்தரிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இதில் சொல்லப்படுகிற செய்தி விவசாயத்தின் பொறுமை, காதலின் அருமை, குடும்பத்தின் உறவு மேன்மை என்கிற செய்திகளை பதிவிட்டு இருக்கிறார் இயக்குனர் பாரதி கண்ணன், அதிலும் குறிப்பாக இன்றைய விவசாயம் இருக்கின்ற அவல நிலையினை கன்னத்தில் அடித்தது போல சொல்லி அதை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தையும் பறைசாற்றி இருக்கிறார். இந்த படத்தின் கதை அமைப்பு, விறுவிறுப்பாக நடத்திச் செல்கிற போக்கும், தொய்வு நிலை இல்லாமல் மனச்சோர்வு அடையும் வகையை தூண்டாமல் மிக சிறப்பாக படம் நகர்கிறது. படத்தில் நடித்துள்ள நடிகர்கள் இசை அமைப்பு ஒளிப்பதிவு எல்லாமே சிறப்பான முறையில் இருக்கிறது. இவர்கள் அனைவரோடும் அமர்ந்து படம் பார்த்ததில் நான் பெருமையாக கருதுகிறேன். நல்ல ஒரு சிந்தனையோட்டம் அந்தமான் மண்ணிலும் விளையும் என்பதற்குச் சான்றாக பாரதி கண்ணன் விளங்குகிறார். இந்த படத்தில் இந்த நான்கு பேரும் வடித்த திட்டம் எப்படி வெற்றி பெருகிறது என்பதை படத்தில் காணலாம்.   படத்தின் உச்சக்கட்டம் அதாவது நிறைவு என்பது ஒரு கிளைமாக்ஸ் இல் இருந்து இன்னொரு கிளைமேக்ஸ், இன்னொரு கிளைமாக்ஸ் இல் இருந்து இன்னும் ஒரு கிளைமேக்ஸ் முடிவில், இறுதி கிளைமாக்ஸ் என்று படத்தை முடித்து இருப்பது இயக்குனரின் புதிதான உத்திக்கு மேலும் ஒரு சிறப்பு.
Read More

வட்டகரா நடிகர்கள் & படக்குழுவினர்

வட்டகரா அணியின் தகவல்

இயக்குனர் கே.பாரதி கண்ணன்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை தாஜ் நூர்
தயாரிப்பாளர் கே.பாரதி கண்ணன்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

வட்டகரா திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

வட்டகரா

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+