சிம்பு நடிப்பில் 2021-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியான ஈஸ்வரன் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை நிதி அகர்வால்.


Click it and Unblock the Notifications
சிம்பு நடிப்பில் 2021-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியான ஈஸ்வரன் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை நிதி அகர்வால்.
இதையடுத்து ஜெயம்ரவிக்கு ஜோடியாக பூமி என்கிற படத்தில் நடித்தார். இந்த இரண்டு படங்களும் ஒரேநாளில் ரிலீஸ் ஆனதால், நிதி அகர்வாலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்த இரு படங்கள் மூலம் நடிகை நிதி அகர்வாலுக்கு தமிழ் நாட்டில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது. அவருக்கு ரசிகர்கள் கோவிலும் கட்டினார்கள்.
இதைப்பார்த்து வியந்து போன நிதி அகர்வால், அந்த ரசிகர்களை நேரில் அழைத்து பாரட்டியதோடு, அவர்கள் செய்யும் மக்கள் நலப்பணிகளுக்கு நிதி உதவியும் அளித்து வருகிறார்.
அவ்வப்போது காதல் சர்ச்சைகளில் சிக்கும் நிதி அகர்வால், கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலை காதலித்து வந்தார் நிதி, அவருடன் டேட்டிங் சென்ற புகைப்படங்களும் வெளியாகின. ஆனால் ஒரு சில ஆண்டுகளிலேயே இவர்கள் பிரிந்துவிட்டனர்.
இதையடுத்து சிம்புவுடன் லிவ்விங் டுகெதராக வாழ்ந்து வருவதாகவும் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் இது வெறும் வதந்தி என பின்னர் தெரியவந்தது.
அதன் பின்னர் ஈஸ்வரன் படத்தில் சிம்புடன் இணைந்து நடித்தால் அவரை காதலித்து வருவதாகவும் அவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதகாவும் வதந்திகள் பரவின.
நடிகை நிதி அகர்வால், உதயநிதிக்கு ஜோடியாக கலகத்தலைவன் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் திரையரங்கில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நிதி அகர்வால் அவ்வப்போது ரசிகர்களுடன் கலந்துரையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.