bredcrumb

பூர்ணாவுக்கு 2வது குழந்தை ரெடி.. மூத்த மகன் மற்றும் கணவர் கொஞ்ச சிறப்பாக நடந்த வளைகாப்பு!

By Mari S
| Published: Wednesday, February 11, 2026, 07:46 [IST]

நடிகை பூர்ணா 2வது முறையாக தாயான நிலையில், அவருக்கு வளைகாப்பு சிறப்பாக நடைபெற்றது. தனது குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Shamna Kasim baby shower photos
1/9

பரத் நடிப்பில் வெளியான முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் மலையாள நடிகை பூர்ணா. அவரது 2வது வளைகாப்பு புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

Shamna Kasim baby shower photos
2/9

ஷாம்னா கசீம் என மலையாள திரையுலகிலும் பூர்ணா என தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமான இவர் சிறந்த டான்சரும் கூட.

Shamna Kasim baby shower photos
3/9

கந்தக்கோட்டை, துரோகி, சவரக்கத்தி, சகலகலா வல்லவன், காப்பான், தலைவி, டெவில் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். 

Shamna Kasim baby shower photos
4/9

தெலுங்கில் மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் படத்தில் இவர் நடனமாடிய பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தது. அகண்டா 2 படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

Shamna Kasim baby shower photos
5/9

ஷானித் ஆசிப் அலி எனும் தொழிலதிபரை 2022ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்ட பூர்ணாவுக்கு ஏற்கனவே ஒரு மகன் உள்ளார். இந்நிலையில், தற்போது மீண்டும் நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். 

Shamna Kasim baby shower photos
6/9

ராம்சரண் மனைவி உபாசனா, சோனம் கபூர் என தொடர்ந்து பல பிரபலங்களும் 2வது முறை கருவுற்று குழந்தையும் பெற்றெடுத்து வரும் நிலையில், கூடிய சீக்கிரமே பூர்ணாவும் 2வது குழந்தையை பெற்றெடுக்க உள்ளார்.

Shamna Kasim baby shower photos
7/9

தனது குடும்பத்துடன் எளிமையான முறையில் வளைகாப்பு கொண்டாட்டம் நடைபெற்றதாகவும் முதல் முறை ஐ லவ் யூ என கணவர் சொல்லும் போது பரிசளித்த ஸ்பெஷல் கவுனை இன்று அணிந்துள்ளேன் என்றும் பூர்ணா தெரிவித்துள்ளார்.

Shamna Kasim baby shower photos
8/9

மூத்த மகன் வயிற்றில் இருக்கும் குட்டிப் பாப்பாவுக்கு முத்தம் கொடுக்கும் க்யூட்டான காட்சி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

Shamna Kasim baby shower photos
9/9

நடிகை பூர்ணாவுக்கு ஏகப்பட்ட சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+