நடிகர் அஜித் குமாரின் தாயார் மோகினி சில வாரங்களுக்கு முன்னர் மறைந்தார். அவரது இறுதிச் சடங்கிற்கு பிரான்சில் இருந்து வந்த அஜித் அடுத்த நாள் மீண்டும் பிரான்ஸ் புறப்பட்டுச் சென்றார்.


Click it and Unblock the Notifications
நடிகர் அஜித்குமாருக்கு அவரது மகளும் மகனும் முத்தங்கள் கொடுப்பது போலவும் அவர்களுக்கு அஜித் முத்தங்கள் கொடுப்பது போலவும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார் அஜித்தின் மனைவி ஷாலினி. இது ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.
நடிகர் அஜித் குமாரின் தாயார் மோகினி சில வாரங்களுக்கு முன்னர் மறைந்தார். அவரது இறுதிச் சடங்கிற்கு பிரான்சில் இருந்து வந்த அஜித் அடுத்த நாள் மீண்டும் பிரான்ஸ் புறப்பட்டுச் சென்றார்.
கார் ரேஸில் கவனம் செலுத்தி வரும் அஜித்குமாருக்கு அவரது தாயாரின் மறைவு மனதளவில் பெரும் சோகத்தை உருவாக்கி உள்ளது.
இந்நிலையில் அவரை மகிழ்விக்க, துயரத்தில் இருந்து மீட்டெடுக்க அவரது மனைவி, மகள் மற்றும் மகன் என மொத்தமாக பிரான்ஸ்க்குச் சென்றுவிட்டனர்.
அஜித்தை தேற்றும் முயற்சிகளில் அவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் அவரது மகள் அனோஷ்கா மகன் ஆத்விக் என இருவரும் அஜித்துக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படங்கள் அவர்கள் இருவருக்கும் அஜித் முத்தம் கொடுக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
அதேபோல் நடிகர் அஜித்குமார் அவரது மனைவி ஷாலினிக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தையும் ஷாலினி சில தினங்களுக்கு முன்னர் பகிர்ந்திருந்தார்.