தனுஷ் இயக்கத்தில் பவிஷ் நடித்து வெளியான ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்து ‘கோல்டன் ஸ்பேரோ’ பாடலில் பிரியங்கா மோகனையே ஓவர் டேக் செய்தவர் தான் ரம்யா ரங்கநாதன்.


Click it and Unblock the Notifications
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் நடித்த ரம்யா ரங்கநாதன் தான் அன்பே டயானா படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். மீசையை முறுக்கு 2 படத்திலும் இவர் ஒரு ஹீரோயினாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனுஷ் இயக்கத்தில் பவிஷ் நடித்து வெளியான ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்து ‘கோல்டன் ஸ்பேரோ’ பாடலில் பிரியங்கா மோகனையே ஓவர் டேக் செய்தவர் தான் ரம்யா ரங்கநாதன்.
பாரி இளவழகன் இயக்கி நடித்துள்ள அன்பே டயானா படத்தில் ஆங்கிலோ இந்தியன் பெண்ணாக அட்டகாசமாக நடித்துள்ளார்.
த்ரிஷா, சமந்தா வரிசையில் சென்னையில் பிறந்து வளர்ந்த ஒரு பெண் ஹீரோயின் ஆவதே பெரிய விஷயம் என்கிற நிலையில், ரம்யா ரங்கநாதன் நடிப்பிலும் தனது அழகிலும் கண்டிப்பாக ரசிகர்களின் கிரஷ்ஷாக இந்த படத்திற்கு பிறகு மேஜிக் பண்ணுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹோம்லி லுக்கிலும், மாடர்ன் உடையிலும் அன்பே டயானா படத்தில் மேஜிக் டயானா கதாபாத்திரத்தில் மாஸ் காட்டுகிறார்.
எந்த ஆங்கிளில் பார்த்தாலும் அழகா இருக்கியேம்மா என ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.
ஹிப் ஹாப் ஆதியின் மீசையை முறுக்கு 2 படத்தில் “குழந்தைபோல இருக்கியே குழாய் சண்டை புடிக்கிறியே கோயிந்தம்மா” பாடலிலும் இவர் தான் நடித்துள்ளார்.
கோலிவுட்டை கண்டிப்பாக இந்த சென்னை பொண்ணு ஒரு கலக்கு கலக்குவார் என்கின்றனர். வரிசையாக பட வாய்ப்புகளும் குவிந்து வருகின்றன.
அன்பே டயானா படத்தில் ஆங்கிலோ இந்தியன் மேஜிக்காக கண்டிப்பாக ரம்யா ரங்கநாதனை ரசிகர்களுக்கு பிடித்து விடும்.
பாரி, கோபியுடன் சேர்ந்து புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் தொடர்ந்து பங்கேற்று படத்துக்கு பக்க பலமாக இருந்து வருகிறார்.