bredcrumb

கருப்பு சூர்யாவுக்கே டஃப் கொடுப்பாங்க போல.. கூமாப்பட்டி, சாந்தினியின் ருத்ர தாண்டவம்!

By Mari S
| Published: Thursday, November 27, 2025, 07:49 [IST]

சின்னத்திரை பிரபலங்களான சாந்தினி பிரகாஷ் மற்றும் கூமாப்பட்டி தங்கபாண்டி இருவரும் நடன நிகழ்ச்சியில் கருப்புசாமியாக வந்து ருத்ர தாண்டவம் ஆடியது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 

Chandhini Prakash Karuppasamy dance
1/12

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ‘சிங்கிள் பசங்க’ நடன நிகழ்ச்சியில் கூமாப்பட்டி தங்கபாண்டி மற்றும் சாந்தினி பிரகாஷ் ஜோடியாக நடனமாடி வருகின்றனர். இந்த வாரம் கருப்பண்ண சாமி, முனீஸ்வரன், காளி தேவி என அவர்கள் கிராமத்து தேவதைகளை போல வேடமிட்டு ஆடிய ருத்ர தாண்டவம் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 

Chandhini Prakash Karuppasamy dance
2/12

சின்னத்திரை நடிகை சாந்தினி பிரகாஷ் அப்படியே காளி தேவி போல இருக்காரு என்றும் காந்தாராவில் வந்த ருக்மணி வசந்தை விட உக்கிரமாக நடித்துள்ளார் என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். 

Chandhini Prakash Karuppasamy dance
3/12

கூமாப்பட்டி தங்கபாண்டியா இது என ரசிகர்கள் ஒரு செகண்ட் தலை சுற்றி கையெடுத்துக் கும்பிடும் அளவுக்கு கருப்பசாமியாகவே காட்சியளித்துள்ளார். 

Chandhini Prakash Karuppasamy dance
4/12

எலுமிச்சை மாலையை கழுத்தில் போட்டுக் கொண்டு ருத்ர தாண்டவம் ஆடும் காட்சி. 

Chandhini Prakash Karuppasamy dance
5/12

கையில் அருவாவை வைத்துக் கொண்டு கருப்பசாமியாக சாமியாட்டம் போட்ட கூமாப்பட்டி தங்கபாண்டியை பலரும் வாழ்த்தி வருகின்றனர். 

Chandhini Prakash Karuppasamy dance
6/12

சாந்தினி பிரகாஷின் ஆக்கிரோஷ அம்மன் ஆட்டத்துக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன. 

Chandhini Prakash Karuppasamy dance
7/12

குதிரை மீது கருப்பசாமியாக அப்படியே அமைதியாக உட்கார்ந்திருக்கும் கூமாப்பட்டியை பார்த்து முதலில் சிலை என்றே ரசிகர்கள் நினைத்து விட்டனர். 

Chandhini Prakash Karuppasamy dance
8/12

நடன நிகழ்ச்சிக்காக இந்த அளவுக்கு உடல் முழுக்க கருப்பு மேக்கப் போட்டுக் கொண்டு நடித்திருப்பது சிறப்பான விஷயம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். 

Chandhini Prakash Karuppasamy dance
9/12

கருப்பு சூர்யாவுக்கே இவங்க ரெண்டு பேரோட பர்ஃபார்மன்ஸ் டஃப் கொடுக்கும் போலயே என நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+