52 வயதாகும் பாய்சன் பேபி நடிகை மலைகா அரோரா கிரேக்க நாட்டுக்குச் சுற்றுலா சென்றுள்ள புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications
தக்க தையா தையா பாட்டுக்கு உயிரே படத்தில் ஆட்டம் போட்ட கவர்ச்சி நடிகை மலைகா அரோரா க்ரீக்கில் சுற்றுலா செய்துள்ள கவர்ச்சி போட்டோக்களை களமிறக்கியுள்ளார்.
52 வயதாகும் பாய்சன் பேபி நடிகை மலைகா அரோரா கிரேக்க நாட்டுக்குச் சுற்றுலா சென்றுள்ள புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
பீச்சில் பிகினி உடைகளை அணிந்து கவர்ச்சி போஸ் கொடுத்து லைக்குகளை குவித்துள்ளார்.
போனி கபூரின் மகன் அர்ஜுன் கபூருடன் பல ஆண்டுகள் லிவ்வின் உறவில் வயதை மீறிய காதலில் ஈடுபட்டு இருந்தார். சில ஆண்டுகளுக்கு முன்னர் இருவரும் பிரேக்கப் செய்து பிரிந்து விட்டனர்.
பாட்டியுடன் காதலா? என்றும் அம்மா வயது இருக்கும் அவரை திருமணம் செஞ்சிக்குவீங்களா என பாலிவுட்டில் ஏகப்பட்ட ட்ரோல்கள் நிலவிய நிலையில் இருவரும் பிரேக்கப் செய்து பிரிந்தனர்.
மலைகா அரோராவுக்கு ஏற்கனவே அர்பாஸ் கான் என்பவருடன் திருமணமாகி 24 வயதில் அர்ஹான் கான் என்கிற மகன் உள்ளார்.
மலைகா அரோரா மீண்டும் புதிய காதலை தேர்வு செய்துள்ளாரா? என்கிற கேள்விகள் தற்போது அவர் முகத்தைக் காட்டாமல் ஒரு இளைஞருடன் குளித்துக் கொண்டாடிய போட்டோவை வெளியிட பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
52 வயதில் 3வது காதலில் விழுந்து விட்டாரா மலைகா அரோரா என்றும் அமீர்கான் 60 வயதில் 3வது திருமணம் செய்யும் போது இவர் காதலிக்கக் கூடாதா என சப்போர்ட்டும் குவிகின்றன.
இந்த மர்ம மனிதர் யாராக இருக்கும் என பாலிவுட் வட்டாரங்கள் வலை வீசித் தேடி வருகின்றன. அவரது மகன் அர்ஹான் கானாகவும் இருக்கும் என்றும் கமெண்ட்டுகள் குவிகின்றன. மகனாக இருந்தால் முகத்தைக் காட்டியிருப்பாரே என்றும் கூறுகின்றனர். கத்தரிக்காய் முத்தினால் கடை தெருவுக்கு வரத்தானே போகிறது.