bredcrumb

Nayanthara: நவராத்திரி கொலுவாக மாறிய நயன்தாரா.. இன்ச் இன்சா பார்த்து ரசிங்கன்னு இப்படி காட்டுறாரே!

By Mohanraj thangavel
| Updated: Wednesday, October 9, 2024, 09:04 [IST]

நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் சமீபத்தில் சிவப்பு நிற சேலை அணிந்து கட்டிக்கொண்ட புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 

Nayanthara
1/8

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் ஐயா படத்தின் மூலம் அறிமுகமானார். இந்தப் படத்தில் மட்டும் நடித்து விட்டு மீண்டும் படிக்கவே சென்று விடலாம் என இருந்த நயன்தாராவுக்கு தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்ததால் சினிமாவை தனது வாழ்க்கையாக மாற்றிக் கொண்டார்.
Nayanthara
2/8

நயன்தாராவை தமிழ் சினிமா ரசிகர்கள் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கின்றனர். மேலும் இவரை நயன் என்று செல்லமாகவும் அழைக்கின்றனர்.
Nayanthara
3/8

நயனைப் பொறுத்தவரையில் அவரது சொந்த வாழ்க்கையில் பல்வேறு ஏற்ற இறக்கங்களைச் சந்தித்துள்ளார். முதலில் சிம்புவுடன் காதலில் இருப்பதாக பேசப்பட்டார், அதன் பின்னர் பிரபுதேவாவை திருமணம் செய்து கொள்ளும் அளவிற்குச் சென்றார்.
Nayanthara
4/8

ஆனால் கடைசி நேரத்தில் ஏற்பட்ட மனமாற்றத்தினால், பிரபுதேவாவை திருமணம் செய்துகொள்ளவில்லை. இதுமட்டும் இல்லாமல் தனது கையில் பிரபுதேவாவின் பெயரை பச்சை குத்திக் கொண்டார்.
Nayanthara
5/8

அதன் பின்னர் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள்குக்கு உயிர் மற்றும் உலக் என இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் இருவரும் இரட்டைக் குழந்தைகள் ஆவர்.
Nayanthara
6/8

நயன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது தான் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்கள், தனது குழந்தைகளுடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்கள், கணவர் விக்னேஷ் சிவனுடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களையும் பகிர்ந்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
Nayanthara
7/8

இந்நிலையில் தான் சிவப்பு நிற சேலை அணிந்து கொண்டு எடுத்த புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அவரே க்ளோசப் ஷாட்டில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
Nayanthara
8/8

இவரை இன்ஸ்டாகிராமில் மட்டும் 9.2 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.
X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+