bredcrumb

வக்கிர புத்தியில்லாமல்.. நம்ம ஹீரோயின்களை இப்படி அழகாகவும் ‘ஏஐ’ மூலம் காட்டலாம்.. வாவ்!

By Mari S
| Published: Wednesday, November 26, 2025, 07:32 [IST]

தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகைகள் ஒன்றாக சேர்ந்து மீன் வாங்குவது போலவும், பூ கட்டுவது போலவும், கோலமிடுவது போலவும், பீச்சில் விளையாடுவதும் போன்ற ஏஐ போட்டோக்களை ரசிகர்கள் உருவாக்கி வைரலாக்கி வருகின்றனர். 

Kollywood Actress Ai version cute photos
1/10

நடிகைகளை பிகினி உடைகளிலும், நிர்வாணமாகவும் ஏஐ உதவியுடன் சித்தரிக்காமல் இப்படி அழகாக ஒன்றாக விளையாடுவது போல உருவாக்கினாலும் ரசிகர்கள் ரசித்துப் பார்ப்பார்கள் என்பதற்கு இந்த ஏஐ ஹீரோயின் வெர்ஷன் போட்டோக்களே சாட்சி என்று கூறலாம். 

Kollywood Actress Ai version cute photos
2/10

ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா என கோலிவுட் நடிகர்கள் டீ கடைக்கு சென்று டீ குடிப்பது போன்ற ஏஐ போட்டோக்கள் சமீபத்தில் வைரலான நிலையில், ஹீரோயின்கள் ஒன்றாக குழாயடியில் இருப்பது போன்ற புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை கவர்கின்றன. 

Kollywood Actress Ai version cute photos
3/10

நயன்தாரா, பூஜா ஹெக்டே, தமன்னா, அமலா பால், பிரியங்கா மோகன் எல்லாம் ஒன்றாக கூடி மோர் குடிப்பது போன்ற ஏஐ புகைப்படத்தின் அழகே தனி தான். 

Kollywood Actress Ai version cute photos
4/10

பரோட்டா கடையில் உட்கார்ந்துக் கொண்டு சமந்தா, சினேகா, நயன்தாரா மற்றும் தமன்னா உள்ளிட்டோர் சாப்பிடும் காட்சியும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

Kollywood Actress Ai version cute photos
5/10

கோலிவுட் நடிகைகள் அனைவரும் ஒன்றாக சேர்ந்துக் கொண்டு கோலமாவு கோகிலா நயன்தாராவுடன் கோலம் போடும் அழகு பார்க்கவே கண்கொள்ளா காட்சியாக உள்ளது. 

Kollywood Actress Ai version cute photos
6/10

பீச்சில் மணல் வீடு கட்டி நயன்தாரா, சமந்தா விளையாடுவதும் செம க்யூட். 

Kollywood Actress Ai version cute photos
7/10

திருவிழாவில் நடிகைகள் நடனமாடுவது போன்ற கவர்ச்சியான ஏஐ எடிட் போட்டோக்களையும் வெளியிட்டுள்ளனர். 

Kollywood Actress Ai version cute photos
8/10

மரத்தடியில் கிராமத்து தேவதைகளாக நம்ம கோலிவுட் நடிகைகள் ஒன்றாக கூடி கதை பேசுவது போன்ற போட்டோ எடிட்டும் ரசிகர்களை ஈர்க்கிறது. 

Kollywood Actress Ai version cute photos
9/10

சீக்கிரமே ஏஐ உதவியுடன் நட்சத்திர கலாட்டா நிகழ்ச்சிகள் அரங்கேறினாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்றே தெரிகிறது. 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+