bredcrumb

சேத்தன் - தேவதர்ஷினி மகள்.. ’96’ நியதிக்கு இப்போ என்ன வயசு தெரியுமா?

By Mari S
| Published: Monday, January 19, 2026, 20:11 [IST]

பராசக்தி படத்தில் அண்ணாவாக அசத்திய நடிகர் சேத்தனின் மகள் நியதி தனது 21வது பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

Niyathi Kadambi birthday celebration photos
1/9

நடிகர் சேத்தன் மற்றும் நடிகை தேவதர்ஷினியின் மகளான நியதி தனது 21 வருடம் வெற்றிகரமாக முடிவடைந்தது. 22வது வருடத்தை வரவேற்கிறேன் என பதிவிட்ட புகைப்படங்கள் டிரெண்டாகி வருகின்றன.

Niyathi Kadambi birthday celebration photos
2/9

96 படத்தில் குட்டி தேவதர்ஷினியாகவே நடித்து சினிமாவில் அறிமுகமானவர் தான் நியதி. 

Niyathi Kadambi birthday celebration photos
3/9

அம்மாவை போல நடிப்பிலும், நடனத்திலும் நிறைய ஆர்வம் உள்ள அவர், விக்ராந்த் உடன் இணைந்து ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகி உள்ள LBW வெப்சீரிஸிலும் நடித்துள்ளார். 

Niyathi Kadambi birthday celebration photos
4/9

ஜோவிகா போல நியதியும் இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கப் போவதாக வதந்திகள் பரவின. ஆனால், அவர் பங்கேற்கவில்லை.

Niyathi Kadambi birthday celebration photos
5/9

டிராவல் பிரியையான நியதி தனியாகவும் தனது நண்பர்களுடன் டூர் அடித்த புகைப்படங்களையும் ஷேர் செய்துள்ளார். 

Niyathi Kadambi birthday celebration photos
6/9

நல்ல நடிக்க வாய்ப்புக் கிடைத்தால் தனது முழு திறமையையும் நிரூபிக்கும் விதமாக தன்னை தயார்ப்படுத்திக் கொண்டே வருகிறார் நியதி.

Niyathi Kadambi birthday celebration photos
7/9

சாகச விரும்பியான நியதிக்கு பலரும் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 

Niyathi Kadambi birthday celebration photos
8/9

சின்னத்திரை மூலம் பிரபலமான அம்மா மற்றும் அப்பா இருவருமே சரியான வழிகாட்டியாக உள்ள நிலையில், நியதி மேலும், பல சிகரங்களை தொடுவார் என ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர். 

Niyathi Kadambi birthday celebration photos
9/9

நியதியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகப்படியான ரசிகர்கள் ஃபாலோயர்களாக இணைந்து வருகின்றனர். 

X