ராட்டி, காதல் கண்மணி, டர்ட்டி பொண்டாட்டி உள்ளிட்ட ஏகப்பட்ட பாடல்களை பாடி பிரபலமானவர் தான் பாடகி ஸ்வாகதா.


Click it and Unblock the Notifications
பாடகி ஸ்வாகதா பிரான்ஸ் நாட்டின் அதிசயமான ஈஃபிள் கோபுரத்துக்கு சென்று எடுத்த போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
ராட்டி, காதல் கண்மணி, டர்ட்டி பொண்டாட்டி உள்ளிட்ட ஏகப்பட்ட பாடல்களை பாடி பிரபலமானவர் தான் பாடகி ஸ்வாகதா.
சாம் சிஎஸ், ஜி.வி. பிரகாஷ் குமார், சந்தோஷ் நாராயணன் என ஏகப்பட்ட இசையமைப்பாளர்கள் இசையில் இவர் பாடல்களை பாடியுள்ளார்.
இசையமைப்பாளர் ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த நிலையில், பாடுவதையே நிறுத்தி விட்டு வட இந்தியாவுக்கு சென்றுவிட்டேன் என பேட்டியளித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்கப் போகிறேன் என்றும் கடந்த மாதம் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். இந்நிலையில், பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள ஈஃபிள் கோபுரம் அருகே எடுத்த சுற்றுலா போட்டோக்களை ஷேர் செய்துள்ளார்.
ஸ்வாகதா தனது கவலைகளை மறந்து ஈஃபிள் கோபுரம் முன்பு அழகாக நின்று காட்சியளித்துள்ளார் என ரசிகர்கள் லைக் போட்டு வருகின்றனர்.
சாதிக்கத் துடிக்கும் பெண்களை சிலர் நசுக்கப் பார்க்கும் சூழல் சினிமா துறையில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்றும் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.