நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான படம் சர்கார். படம் விமர்சன ரீதியாக பல அடிகளை வாங்கினாலும் வணிக ரீதியாக வெற்றிப் படமாக மாறியது.


Click it and Unblock the Notifications
Vijay: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வெளியான சர்கார் படத்தின் சண்டைக் காட்சிகள் தொடர்பான ஏ.ஐ. புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான படம் சர்கார். படம் விமர்சன ரீதியாக பல அடிகளை வாங்கினாலும் வணிக ரீதியாக வெற்றிப் படமாக மாறியது.
படத்தில் இடம் பெற்ற சண்டைக் காட்சிகளை வைத்து இணையவாசி ஒருவர் உருவாக்கி உள்ள ஏ.ஐ. புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த சண்டைக் காட்சியில் விஜய் நடனம் ஆடிக் கொண்டே சண்டை செய்வது போல காட்சி அமைத்திருப்பார் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ்.
ஏ.ஆர். ரகுமான் இசை, தளபதியின் நடனம் மற்றும் சண்டைக் காட்சியை திரையில் பார்க்கும்போது தளபதி ரசிகர்களால் இருக்கையில் அமர முடியவில்லை என்று கூறும் அளவுக்கு இந்த காட்சிகள் இருந்தது.
குறிப்பாக இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. பலரது மொபைல் போன்களின் வால்பேப்பராகவும் இந்த புகைப்படம் இருந்தது.