X
முகப்பு » பிரபலங்கள் » ஆண்ட்ரியா ஜெறேமியா
ஆண்ட்ரியா ஜெறேமியா

ஆண்ட்ரியா ஜெறேமியா

Singer/Actress/Actor
பயோடேட்டா:  ஆண்ட்ரியா ஜெறேமியா   பிண்ணனிப் பாடகியும் பிண்ணனிக் குரல் கொடுப்பவரும் நடிகையும் ஆவார். இவர் ஆரம்ப காலகட்டங்களில் பாடகியாக அறிமுகமானார். பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய திரைப்படங்கள் இவரை நடிகையாக உயர்த்தின. ஆண்ட்ரியா, சென்னையிலுள்ள, அரக்கோணத்தில், ஆங்கில-இந்தியக் குடும்பத்தில் பிறந்தவர். இவர், நுங்கம்பாக்கத்திலுள்ள பெண்கள் கிறித்தவக் கல்லூரியில் கல்வி பயின்றார். இவருடைய தந்தை, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார். இவருடைய இளைய தங்கை, பெல்சியத்திலுள்ள இலெவன் நகரத்தில் துணை ஆய்வாளராக உள்ளார்.  ஆண்ட்ரியா தன்னுடைய பத்து வயது முதல், யங் இசுடார்சு என்னும் குழுவில் பாடி வருகிறார். இவர் கல்லூரியில் மேடை நாடகத்திலும் நடித்துள்ளார். இவர், வாழும் கலை மற்றும் கலைஞர்களுக்காகத் த சோ மஸ்ட் கோ ஆன் (The Show Must Go On-TSMGO Productions) என்ற அமைப்பையும் தொடங்கி நடத்தி வருகிறார். பின்னர், திரைப்படங்களில் பாடல்கள் பாடுவதைத் தொழிலாகச் செய்தார். கௌதம் மேனனின் வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் பாடிய பிறகு, அவருடைய அடுத்த படமான பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தில் சரத்குமாருடன் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படம் சேம்சு சீகலின் ஆங்கில நாவலான தீரெயில்டுவின் கதையைக் கொண்டது.  ஆண்ட்ரியா, கல்யாணி வெங்கடேசாகவும் தன்னுடைய கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் உள்ளதால், பிணையக் கைதியாக நடித்தார். சிம்ரன், சோபனா, தபு உள்ளிட்ட நடிகைகளின் நிராகரிப்புக்குப்பின் இக்கதாபாத்திரத்திற்கு ஆண்ட்ரியா தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு, செல்வராகவன் இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளியான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் நடித்தார். 2011-ம் ஆண்டு, இவர், வெங்கட் பிரபு இயக்கத்தில் ஆகத்து 2011இல் வெளியான மங்காத்தா திரைப்படத்திலும் நடித்தார். இவர், கமல்ஹாசனுடன், விஸ்வரூபம் திரைப்படத்திலும், வெற்றிமாறனின், வட சென்னை திரைப்படத்திலும் நடித்தார்.
மேலும் படிக்க

ஆண்ட்ரியா ஜெறேமியா திரைப்படங்கள்

திரைப்படம் இயக்குனர் வெளிவரும் தேதி
தில் சத்யா Jul 2026
as Actress
கோபி நைனர் Sep 2025
நாஞ்சில் நாகராஜன் 29 Nov 2025
விக்ர அசோக் 21 Nov 2025

ஆண்ட்ரியா ஜெறேமியா: வயது, திரைப்படங்கள், குடும்பம் & தனிப்பட்ட விவரங்கள்

ஆண்ட்ரியா ஜெறேமியா

பெயர் ஆண்ட்ரியா ஜெறேமியா
பிறந்த தேதி 21 Dec 1984
வயது 42
பிறந்த இடம் சென்னை
முகவரி
மதம்
தேசம்
உயரம்
ராசி
பொழுதுபோக்கு

ஆண்ட்ரியா ஜெறேமியா நிகர மதிப்பு

நிகர மதிப்பு

ஆண்ட்ரியா ஜெறேமியா புகைப்படங்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+