X
முகப்பு » பிரபலங்கள் » ரித்து வர்மா
ரித்து வர்மா

ரித்து வர்மா

Actress
பயோடேட்டா:  ரித்து வர்மா, தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து குறிப்பிடப்படும் ஒரு இளம் நாயகியாக பிரபலமானவர். இவர் தெலுங்கு சினிமாவில் நடித்து திரைத்துறையில் அறிமுகமானவர் , பின்னர் தெலுங்கு திரையுலகில் பல வெற்றி படங்களில் நடித்து பல விருதுகளை வென்று புகழ் பெற்றுள்ளார் .   ரித்து வர்மா 2017 ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான " வேலையில்லா பட்டதாரி 2 " படத்தில் இடம் பெற்ற அனிதா என்ற ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார் .   ரித்து வர்மா தமிழில் நடித்த திரைப்படங்கள் ரித்து வர்மா அழகிய புகைப்படங்கள் பிறப்பு / திரைப்பயண தொடக்கம் ரித்து வர்மா , ஆந்திர மாநிலத்தில் உள்ள ஐராபாத் நகரத்தில் பிறந்து வளர்த்துள்ளார் . இவரது பெற்றோர்கள் மத்திய பிரதேஷ் மாநிலத்தை பூர்விகமாக கொண்டவர்கள் . தனது இல்லத்தில் ஹிந்தி பேசும் குடும்பத்தை சார்ந்த இவர் , தனது பள்ளி படிப்பினை வில்லா மேரி பெண்கள் உயர் நிலை பள்ளியில் படித்துள்ளார் . பின்னர் இவரது இளங்கலை பட்டத்தினை ஆந்திரா மாநிலத்தில் உள்ள மல்ல ரெட்டி இன்ஜினியரிங் கல்லூரியில் இன்ஜினியரிங் படிப்பினை படித்துள்ளார் .   ஐராபாத்தில் தனது இளங்கலை படத்தினை வென்ற இவர் , தனது கல்லூரி படிப்பிற்கு பின்னர் மாடெல்லிங் துறையில் ஆர்வம் கொண்டு பல அழகு நிகழ்ச்சிகளில் கலந்து வந்துள்ளார் . இவர் மிஸ் . ஹைட்ரபாத் என்ற பட்டத்திற்கு மிக அருகில் சென்று தோல்வியை சந்தித்தவர் . அந்த போட்டியில் இவர் இரண்டாம் இடத்தினை பெற்றுள்ளார் .   ரித்து வர்மா , 2012 ம் ஆண்டு " அணுகொகுண்டா " என்ற குறும் படத்தில் நடித்து தனது திரைப்பயணத்தை தெலுங்கில் தொடங்கியுள்ளார் . இந்த குறும் படம் தெலுங்கு திரைப்பட ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்கள் பெற்று பெரிய அளவில் பிரபலமானது . மேலும் தெலுங்கு திரையுலகில் பல விருதுகளையும் இந்த குறும்படம் வென்றுள்ளது .   இந்த குறும்படத்தில் நடித்தற்காக இவர் சிறந்த நடிகைக்கான பிரிவில் பல விருதுகளை வென்று புகழ் பெற்றார் . இந்த குறும்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் தெலுங்கு திரையுலகில் " பிரேமா இஷக் காதல் " என்ற படத்தில் நாயகியாக நடிக்க வாய்ப்பினை பெற்று தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகியுள்ளார் .   பிரபலம் ரித்து வர்மா , அணுகொகுண்டா என்ற குறும்படத்தில் மூலம் மக்களின் ஆதரவில் பிரபலமான இவர் , பின்னர் பிரேமா இஷக் காதல் என்ற திரைப்படத்தில் நடித்து தெலுங்கு வெள்ளித்திரையில் அறிமுகமாகியுள்ளார் . இப்படத்தினை தொடர்ந்து இவர் , நா ராகுமுரண்டு (2014), எவடே சுப்பிரமணியம் (2015) என்ற படங்களில் நாயகியாக நடித்து புகழ் பெற்றுள்ளார் .   இப்படங்களை தொடர்ந்து இவர் நடித்த நகைச்சுவை மற்றும் காதல் படமாக வெளியான " பெல்லி சொப்புழு " திரைப்படம் இவரது திரைவாழ்வில் ஒரு முக்கிய படமாக அமைந்தது . இப்படத்தில் நடித்தற்காக இவர் பல விருதுகளை தெலுங்கு திரையுலகில் வென்றுள்ளார் . மேலும் இப்படம் தேசிய விருது , பிலிம்பேர் விருது என பல விருதுகளையும் , சிறந்த நடிகைக்கான விருதுகளையும் இப்படம் வென்றுள்ளது .   இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் தெலுங்கு திரையில் ஒரு முக்கிய நடிகையாக சித்தரிக்கப்பட்டார் . பின்னர் இந்த படத்தின் இவரது கதாபாத்திரத்தின் பிரபலத்தை தொடர்ந்து இவர் தமிழ் திரைப்பட இயக்குனர் கவுதம் மேனன் இயக்கிய " துருவ நட்சத்திரம் " திரைப்படத்தில் நாயகையாக நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார் .   தமிழ் திரைப்பட அனுபவம் ரித்து வர்மா தெலுங்கு திரையுலகில் இவர் பெற்ற புகழினை தொடர்ந்து தமிழில் " துருவ நட்சத்திரம் " திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமானார் , ஆனால் இப்படம் வெளியாக தாமதம் ஆனதால் 2017 ம் ஆண்டு தனுஷ் நடித்த " வேலையில்லா பட்டதாரி 2 " திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார் . அந்த படத்தில் இவர் " அனிதா " என்ற ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் , இந்த கதாபாத்திரத்தில் இப்படத்தின் முதல் பாகத்தில் நடிகை " சுரபி " நடித்துள்ளார் காரணங்களால் இவர் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க இயலாததால் ரித்து வர்மா இப்படத்தில் நடித்துள்ளார் .   தமிழ் திரையுலகில் ரித்து வர்மா நடிப்பில் 2020 ம் ஆண்டு வெளியான " கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் " திரைப்படம் மிக பெரிய அளவில் வெற்றியை சந்தித்தது . இப்படம் வர்த்தக ரீதியாகவும் , வசூல் ரீதியாகவும் தமிழ் மற்றும் மலையாள திரைத்துறையில் வெற்றி பெற்று இவருக்கு தமிழ் நல்ல வரவேற்பை பெற்று தந்துள்ளது .
மேலும் படிக்க

ரித்து வர்மா திரைப்படங்கள்

ரித்து வர்மா: வயது, திரைப்படங்கள், குடும்பம் & தனிப்பட்ட விவரங்கள்

ரித்து வர்மா

பெயர் ரித்து வர்மா
பிறந்த தேதி 10 Mar 1990
வயது 36
பிறந்த இடம் ஹைதராபாத்
முகவரி
மதம்
தேசம்
உயரம்
ராசி
பொழுதுபோக்கு

ரித்து வர்மா நிகர மதிப்பு

நிகர மதிப்பு

ரித்து வர்மா புகைப்படங்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+