ஆகம்

  ஆகம்

  Release Date : 18 Mar 2016
  1/5
  Critics Rating
  4/5
  Audience Review
  ஆகம் தமிழ் திரையுலகில் டாக்டர் அப்துல் காலமின் கனவிற்கு சமர்ப்பணம் செய்யும் வகையில் எடுக்கப்பட்ட திரைப்படம். இத்திரைப்படத்தை விஜய் ஆனந்த் ஸ்ரீராம் இயக்க, இர்பான், ஜெயப்ரகாஷ், ரியாஸ் கான், தீக்ஷிதா மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் விஷால் சந்திரசேகர்.

  கதை : 

  ஒரு நடுத்தரவர்க்க குடும்பத்தில் பிறந்த இரண்டு மகன்களிடமிருந்து கதை ஆரம்பிக்கின்றது.மூத்த மகன் ரவி ராஜா ஒரு சராசரி படித்த பட்டதாரி. எப்படியாவது வெளிநாட்டிற்கு சென்றுவிட வேண்டும் என்று முயற்சிக்கின்றார். ஆனால், இளைய மகன் சாய் (இர்பான்) நல்ல திறமையுள்ள...
  • விஜய் ஆனந்த் ஸ்ரீராம்
   Director
  • விஷால் சந்திரசேகர்
   Music Director
  • tamil.filmibeat.com
   1/5
   படித்துவிட்டு வெளிநாட்டுக்குப் போகாமல் இந்தியாவிலேயே வேலைப் பார்க்க வேண்டும் என்பதைக் கொள்கையாகக் கொண்ட கல்லூரி மாணவன் இர்ஃபான். இதற்காக தனி இயக்கத்தையே நடத்துகிறார்.

   வல்லரசு இந்தியா என்பதை விளக்க கிராபிக்ஸ் என்ற பெயரில் ஏக அமெச்சூர்த்தனங்கள்.

   தேசப்பற்று மிக்க இளைஞராக நடிக்க முயன்றுள்ளார் இர்ஃபான். நாயகி தீக்ஷிதாவுக்கு பெரிதாக வேலையில்லை. வந்து போகிறார்.

   ஹாலிவுட் பாணியில் கதை சொல்ல வேண்டும் என்று விரும்பியிருக்கிறார் இயக்குநர். ஆனால் அதை சராசரி கோலிவுட் படத்தை விட குறைந்த தரத்தில்தான் தந்திருக்கிறார். காட்சிகள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் அல்லாடுகின்றன.

   முதல் பாதிக்கும் இரண்டாம் பாதிக்கும் என்ன தொடர்பு என்பதை இன்னொரு சினிமா எடுத்து விளக்க வேண்டும் இயக்குநர்.

   விஷால் சந்திரசேகர் இசையில் பாடல்கள் ஒன்றும் எடுபடவில்லை..