»   »  புகழ், சவாரி, ஆகம், என்று தணியும், விடாயுதம் இன்றைய ரேஸில் வெற்றி யாருக்கு?

புகழ், சவாரி, ஆகம், என்று தணியும், விடாயுதம் இன்றைய ரேஸில் வெற்றி யாருக்கு?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: புகழ், சவாரி, ஆகம், என்று தணியும், விடாயுதம் என்று மொத்தம் 5 படங்கள் இன்று வெளியாகியுள்ளன.

இதில் ஜெய், இர்ஃபான் படங்கள் தவிர மற்ற படங்கள் அனைத்துமே புதுமுக நடிகர்களின் நடிப்பில் வெளியாகியிருக்கிறது.


இன்று வெளியாகியிருக்கும் படங்களின் பலம், பலவீனம் குறித்து இங்கே பார்க்கலாம்.


புகழ்

புகழ்

ஜெய் நடிப்பில் நீண்ட நாட்களாக உருவாகி வந்த புகழ் திரைப்படம் இன்று வெளியாகியிருக்கிறது. உதயம் என் எச் 4 புகழ் மணிமாறன் இயக்கியிருக்கும் இப்படத்தில் ஜெய்யுடன் இணைந்து சுரபி, கருணாகரன், ஆர் ஜே பாலாஜி நடித்திருக்கின்றனர். விவேக்-மெர்வின் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அரசியல் பிரச்சினையில் சிக்கும் இளைஞன் ஒருவன் அப்பிரச்சினைகளை முறியடித்து, எப்படி அதிலிருந்து மீளுகிறான் என்பதே படத்தின் கதை.ஜெய் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் இப்படம் புகழ் வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ஆகம்

ஆகம்

'சரவணன் மீனாட்சி' புகழ் இர்ஃபான் நாயகனாக நடித்து வெளியாகியிருக்கும் படம் ஆகம். வேலை வாய்ப்புகளில் நடக்கும் ஊழலைப் பற்றிய கதையை படமாக இயக்கியிருக்கிறார் விஜய் ஆனந்த் ஸ்ரீ ராம். விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கும் இப்படத்தில் இர்ஃபானுடன் இணைந்து ஜெயபிரகாஷ், ரியாஸ்கான் ஆகியோர் நடித்திருக்கின்றனர். இர்ஃபானுக்கு ஜோடியாக தீக்ஷிதா என்னும் அறிமுக நாயகி இப்படத்தில் நடித்திருக்கிறார். ஓரளவு தெரிந்த நடிகர்கள் இருப்பது படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.


சவாரி

சவாரி

தினசரி வாழ்வில் அதிகம் புழங்குகின்ற ஒரு வார்த்தையை படத்தின் தலைப்பாக வைத்திருக்கின்றனர். அறிமுக இயக்குநர் குகன் சென்னியப்பன் இயக்கியிருக்கும் இப்படத்தில் பெனிட்டோ, சனம் ஷெட்டி, முனீஷ்காந்த் நடித்திருக்கின்றனர். இப்படத்திற்கும் விஷால் சந்திரசேகரே இசையமைத்திருக்கிறார். திரில்லரை மையமாகக் கொண்டு வெளியாகியிருக்கும் சவாரி ரசிகர்களைக் கவருமா? பார்க்கலாம்.


விடாயுதம்

விடாயுதம்

தமிழ் சினிமாவில் ரசிகர்களை அதிகம் தொந்தரவு செய்த பேய், பாம்பு இரண்டையும் மோதவிட்டு இப்படத்தை இயக்குநர் நாகமாசினி எடுத்திருக்கிறார். ராம் சரவணன், கமலி இருவரும் நாயகன், நாயகியாக நடிக்க முக்கிய வேடத்தில் ஸ்லம்டாக் மில்லியனர் ' புகழ் தன்வி லங்கோர் நடித்திருக்கிறார்.பாம்பு, பேய் சண்டையை ரசிகர்கள் ரசிப்பார்களா? என்பது சந்தேகம் தான்.


என்று தணியும்

என்று தணியும்

தமிழ்நாட்டை உலுக்கிய ஜாதி ஆணவக் கொலைகளை மையமாகக்கொண்டு, என்று தணியும் படம் உருவாகியிருக்கிறது. இயக்குநர் பாரதி ராஜாவின் உதவியாளர் பாரதி கிருஷ்ணகுமார் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.யுவன், சந்தனா, ஜீவிதா நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் இப்படத்திற்கு ஆர்.பிரபாகர் இசையமைத்திருக்கிறார்.


மொத்தத்தில் ஜெய் நடிப்பில் வெளியாகியிருக்கும் புகழ் தவிர மற்ற எல்லாமே சிறு பட்ஜெட் படங்களாக வெளியாகியுள்ளன. இன்றைய ரேஸில் எந்தப்படம் ஜெயிக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.English summary
Today Released Movies List- Pugazg, Savari, Aagam, Endru Thaniyum, Vidayutham.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil