»   »  ஆகம்: கோட்டீஸ்வர ராஜூவும் கோட் போட்ட ஹீரோக்களும்!

ஆகம்: கோட்டீஸ்வர ராஜூவும் கோட் போட்ட ஹீரோக்களும்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹீரோ கோட் போட்டாலே நம்ம வலைஞர்கள் ஓட்டி எடுப்பார்கள். ஆகம் படத்தில் இர்ஃபான், ஜெயப்பிரகாஷ், ரியாஷ்கான் என மூவருக்குமே கோட் சூட் காஸ்ட்டியூம் போட்டு கலக்கலாக உலாவ விட்டுள்ளனர். சும்மா விடுவார்களா ஒரே ரசிப்போ ரசிப்புதானாம்.

இந்தப்படத்தின் தயாரிப்பாளர் கோட்டீஸ்வர ராஜூ என்பதால் அனைவருக்கும் கோட் போட்டு விட்டுவிட்டாரோ என்பதுதான் இப்போதைய கமெண்ட் ஆக உள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குனர் முனைவர். விஜய் ஆனந்த் ஸ்ரீராம் இயக்குகிறார்

பொங்கி எழு மனோகரா' படத்தை தொடர்ந்து இர்ஃபான் நடிக்கும் படம் ‘ஆகம்'. இந்தப் படத்தில் இர்ஃபானுடன் ஜெயபிரகாஷ், ரியாஸ்கான், ரவிராஜா மற்றும் அறிமுக நாயகி தீக்சிதா ஆகியோர் நடிக்கிறார்கள். இத்திரைப்படத்தை ஜோ ஸ்டார் எண்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பாக கல்வியாளர் கோடீஸ்வரராஜா தயாரிக்கிறார்.

[ஆகம் படங்கள்]

ஆகம் என்ன அர்த்தம்

ஆகம் என்ன அர்த்தம்

இந்த ‘ஆகம்' படம் சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது. "ஆகம்' என்றால் ‘வருகை' என்று அர்த்தம். மனிதத்தையும், தொழில் நுட்ப வளர்ச்சியினையும் ஒருங்கிணைத்து தலைசிறந்த தொழில் நுட்ப கலைஞர்களைக் கொண்டு நல்ல சினிமா உருவாக்குவதை கருத்தில் கொண்டு தமிழ்த் திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளோம்" என்கிறார் தயாரிப்பாளர் கோட்டீஸ்வர ராஜா.

புதுமையான இர்ஃபான்

புதுமையான இர்ஃபான்

தனது முந்தையப் படங்களில் இலகுவான வேடங்களை ஏற்று நம் மனதில் இடம்பித்த இளம் கதாநாயகன் இர்ஃபான், 'ஆகம்' திரைப்படத்தின் மூலம் முற்றிலும் புதியதொரு வேடத்தில் தோன்ற உள்ளார்.

ரியாஷ்கான் - தீஷிதா

ரியாஷ்கான் - தீஷிதா

இதில் ஜெயபிரகாஷ், ரியாஸ் கான், பிரேம், ரவி ராஜா மற்றும் அறிமுக நாயகி தீஷிதா ஆகியோர் நடிக்கிறார்கள். ஆர்.வி.சரண் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு மனோஜ் கியான் படத்தொகுப்பு செய்கிறார். ஜினேஷ் வசனங்கள் எழுத, சதீஷ்குமார் கலைத்துறையை கவனிக்கிறார். விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார்.

ஊழல் ஒழிப்பு

ஊழல் ஒழிப்பு

இப்படம் குறித்து கூறிய இயக்குனர் விஜய் ஆனந்த் ஸ்ரீராம், ‘ஆகம்' திரைப்படம் வேலை வாய்ப்பு சந்தையில் நடக்கும் பல கோடி மதிப்பிலான ஊழலை பற்றிய படம். சோஷியல் த்ரில்லர் பாணியில் வரும் இப்படத்தின் கதை பல வருடத்தின் ஆய்வுக்கு பின் எழுதப்பட்டுள்ளது.

English summary
Aagam is an upcoming tamil movie. Irfan, Jayaprakash and Riyaz Khan in lead role.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil