போங்கு

  போங்கு

  U | Action
  Release Date : 02 Jun 2017
  2.5/5
  Critics Rating
  Audience Review
  போங்கு புதுமுக இயக்குனர் தாஜுதீன் இயக்கத்தில் நட்டி நடராஜ் மற்றும் ருஹி சிங் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தில் நடராஜ் ஒரு கார் திருடனாக நடித்துள்ளார்.

  கதை :

  ஒஸ்தியான கார்கள் விற்கும் நிறுவனத்தில் வேலைப் பார்க்கும் நண்பர்கள் நட்டி, ரூஹி மற்றும் அர்ஜுன். எம்எல்ஏ மகளுக்கு அந்த நிறுவனத்திலிருந்து ஒரு கார் சப்ளை செய்யப் போகிறார்கள் நட்டியும் அர்ஜுனும். வழியில் சிலர் அந்தக் காரை கடத்திவிடுகிறார்கள். நிறுவனத்துக்கு நட்டி, அர்ஜுன் மீது சந்தேகம். ஜெயிலில் தள்ளிவிடுகிறார்கள். ரூஹிக்கும் கல்தா.
  • தாஜுதீன்
   Director
  • tamil.filmibeat.com
   2.5/5
   கார் திருட்டை அடிப்படையாகக் கொண்ட படம். ஒரு ஹாலிவுட் படத்தின் அன்அஃபிஷியல் ரீமேக் மாதிரியான ஒரு கதை இந்த போங்கு.

   அதே நட்டி. படபடப்பு பேச்சு, ரஜினியை நகலெடுத்த மாதிரி உடல் மொழி. ஆனால் சதுரங்க வேட்டை அளவுக்கு இதில் அவரது பாத்திரம் அமையவில்லை.

   ரூஹி சிங் கூட்டத்தோடு கூட்டமாகிவிடுகிறார். முனீஸ்காந்த், அர்ஜுனன் அவ்வப்போது கிச்சுகிச்சு மூட்டுகிறார்கள்.

   வில்லன் சரத் லோஹிதஸ்வாவுக்கு மிரட்டலான ரோல். கச்சிதமாக செய்திருக்கிறார். அதுல் குல்கர்னி கொஞ்ச நேரம் வந்தாலும் கவர்கிறார்.

   இடைவேளைக்குப் பிறகு வசனங்கள் நன்றாக இருந்தாலும், முதல் பாதியில் சொல்லிக் கொள்ளும்படி திருப்பங்களோ, ஈர்க்கும் காட்சிகளோ இல்லை.

   மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு, ஸ்ரீகாந்த் தேவா இசை ஓகே.

   பெரிய எதிர்ப்பார்ப்பில்லாமல் போனால், ஒரு முறை பார்க்கலாம்..