»   »  போங்கு - விமர்சனம்

போங்கு - விமர்சனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
Rating:
2.5/5

-எஸ் ஷங்கர்

நடிகர்கள்: நட்டி, ருஹி சிங், சரத் லோஹிதஸ்வா, ராமதாஸ், அதுல் குல்கர்னி, அர்ஜுனன்


ஒளிப்பதிவு: மகேஷ் முத்துசாமி


இசை: ஸ்ரீகாந்த் தேவா


தயாரிப்பு: ரகுகுமார்


இயக்கம்: தேஜ்


கார் திருட்டை அடிப்படையாகக் கொண்ட படம். ஒரு ஹாலிவுட் படத்தின் அன்அஃபிஷியல் ரீமேக் மாதிரியான ஒரு கதை இந்த போங்கு.


ஒஸ்தியான கார்கள் விற்கும் நிறுவனத்தில் வேலைப் பார்க்கும் நண்பர்கள் நட்டி, ரூஹி மற்றும் அர்ஜுன். எம்எல்ஏ மகளுக்கு அந்த நிறுவனத்திலிருந்து ஒரு கார் சப்ளை செய்யப் போகிறார்கள் நட்டியும் அர்ஜுனும். வழியில் சிலர் அந்தக் காரை கடத்திவிடுகிறார்கள். நிறுவனத்துக்கு நட்டி, அர்ஜுன் மீது சந்தேகம். ஜெயிலில் தள்ளிவிடுகிறார்கள். ரூஹிக்கும் கல்தா.


Bongu Review

சிறையிலிருக்கும் இருவரையும் ரூஹி வெளியில் எடுக்கிறார். ஜெயில் அனுபவத்தை வைத்துக் கொண்டு கார் கடத்தலில் இறங்குகிறார் நட்டி. நண்பர்கள் துணை நிற்க, முதல் திருட்டிலேயே கோடிகளில் பணம்.


அப்போதுதான் ஒரு அசைன்மென்ட் கிடைக்கிறது. மதுரை தாதா சரத் லோஹிதஸ்வாவிடம் உள்ள 10 காஸ்ட்லி கார்களைத் திருட வேண்டும். உடனே மதுரைக்குக் கிளம்புகிறது நட்டி அன்ட் கோ. அங்கே பார்த்தால், பத்து கார்களில் ஒன்றாக தங்களிடமிருந்து கடத்தப்பட்ட காரும் நிற்கிறது.


Bongu Review

மீதியை எளிதில் யூகிக்க முடிகிறதா... அதுதான் போங்கு.


அதே நட்டி. படபடப்பு பேச்சு, ரஜினியை நகலெடுத்த மாதிரி உடல் மொழி. ஆனால் சதுரங்க வேட்டை அளவுக்கு இதில் அவரது பாத்திரம் அமையவில்லை.


ரூஹி சிங் கூட்டத்தோடு கூட்டமாகிவிடுகிறார். முனீஸ்காந்த், அர்ஜுனன் அவ்வப்போது கிச்சுகிச்சு மூட்டுகிறார்கள்.


Bongu Review

வில்லன் சரத் லோஹிதஸ்வாவுக்கு மிரட்டலான ரோல். கச்சிதமாக செய்திருக்கிறார். அதுல் குல்கர்னி கொஞ்ச நேரம் வந்தாலும் கவர்கிறார்.


இடைவேளைக்குப் பிறகு வசனங்கள் நன்றாக இருந்தாலும், முதல் பாதியில் சொல்லிக் கொள்ளும்படி திருப்பங்களோ, ஈர்க்கும் காட்சிகளோ இல்லை.


மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு, ஸ்ரீகாந்த் தேவா இசை ஓகே.


பெரிய எதிர்ப்பார்ப்பில்லாமல் போனால், ஒரு முறை பார்க்கலாம்.

English summary
Review of Natti Natraj's new release Bongu movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil