»   »  நட்டி நடிக்கும் 'போங்கு'.... விதவிதமான கார்கள்...பரபர திரைக்கதை: வீடியோ

நட்டி நடிக்கும் 'போங்கு'.... விதவிதமான கார்கள்...பரபர திரைக்கதை: வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கேமராமேன் நட்டி என்கிற நடராஜ் நடிக்கும் படம் போங்கு. போங்கு பயணம் பற்றிய படம் என்பதால் விதவிதமான கார்களும் படத்தில் நடித்துள்ளனவாம். இந்த படம் நட்டிக்கு திருப்புமுனையாக அமையும் என நட்டி நம்புகிறார்.

சதுரங்கவேட்டையில் புகழை அள்ளியவர் நட்டி. அவர் நடித்துள்ள 'போங்கு' படம் அவருக்கு பெரிய வெற்றியைத் தரும் என அண்மையில் நடந்த பிர்ஸ்மீட்டில் கலந்துகொண்ட அனைவரும் கூறினார்கள். இந்த படத்தில் ருஹி சிங் ஹீரோயினாக நடித்துள்ளார். இவர் இரண்டு இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Bongu a tamil movie will be released on June 2

மற்றும் மனிஷா ஶ்ரீ, அதுல் குல்கர்னி, முண்டாசுபட்டி ராம்தாஸ், அர்ஜூன், ஷரத் லோகித் தஷ்வா, பாவா லட்சுமணன், மயில்சாமி, சாம்ஸ் ஆகியோர் நடித்துள்ளனர். புதுமுக இயக்குநர் தாஜ், கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். இவர் பிரபல கலை இயக்குநர் சாபுசிரிலிடம் உதவியாளராக பணியாற்றியவர்.

இந்தத் திரைப்படம் ஜூன் 2ஆம் தேதி வெளியிடப்படுகிறது என படக் குழு தெரிவித்துள்ளது.கார்களை பற்றிய படம் என்பதால் இளைஞர்களுக்கும் கார் விரும்பிகளும் விரும்பும் படமாக இருக்கும் எகின்றார்கள்.

English summary
Bongu a tamil movie will be released on June 2 and cinematographer Nutty acted in this movie. This movie about cars and may attract car lovers and youngsters.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil