twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    போங்கு – ஒரு ரேர் பீஸின் ஆர்டினரி திரைப்படம்!

    By Shankar
    |

    கதை திரைக்கதையைத் தாண்டி கதாப்பாத்திர அமைப்புங்குறது ஒரு படத்தோட வெற்றிக்கு மிகவும் முக்கியமான ஒண்ணு. கதாப்பாத்திரங்களோட அமைப்புதான் ஒரு திரைக்கதைக்கு உயிர் கொடுக்குற முக்கியமான விஷயம். ஒரு படத்துல ஒரு நடிகர் நடிக்கிறாருன்னா அந்தப் படத்தப் பத்தி பேசும்போதெல்லாம் அவர் நடிச்ச கதாப்பாத்திரம்தான் முன்னால வந்து நிக்கனும். ரொம்பப் பெரிய உதாரணம்லாம் வேணாம்.. பாகுபலிய எடுத்துக்குங்க.. பாகுபலியப் பத்திப் பேசும்போது நமக்கு கட்டப்பாங்குற பேர்தான் மொதல்ல வருமே தவற சத்யராஜ்ங்குற பேர் முன்னால வந்து நிக்காது. அதே மாதிரிதான் அந்தப் படத்துல ஒவ்வொரு பாத்திரப் படைப்பும்.

    ஒரு கதாப்பாத்திரம் எவ்வளவு நேரம் திரையில வருதுங்குறது முக்கியம் இல்லை. அது அந்தக் கதையில ஏற்படுத்துற தாக்கமும், பார்வையாளர்கள் மனதுல ஏற்படுத்துற தாக்கமும்தான் முக்கியம். ரெய்டு-2 ன்னு ஒரு ஆக்‌ஷன் படம் இருக்கு. பெரும்பாலானோர் பார்த்திருக்கக் கூடும். அதுல Paid கில்லர் ஒருத்தன் இருப்பான். மொத்தமா அந்த கேரக்டர் படத்துல நாலு சீன் தான் வரும். முதல் காட்சில ஒருத்தன அவன் கொடூரமா கொலை பன்னுவான். அடுத்த காட்சில அவனோட ஃபேமிலி எப்படி.. அவனோட மனைவி அவன எப்படி நடத்துறாங்குறத காமிப்பாங்க.. அதுக்கு அடுத்த சீன்ல அவன இன்னொரு கேங் கொலை பண்ணிரும். இவ்வளவுதான் அவனோட சீன்ஸ் அந்தப் படத்துல. அதிகபட்சம் பத்து நிமிஷம். அவன் நல்லவன்லாம் கெடையாது. கொடூரமான கொலைகாரன். ஆனாலும் அவன் சாகும்போது நமக்கு கஷ்டமா இருக்கும். அந்த குறுகிய நேரத்துல நம்ம மனசுல அவன ஆழமா பதிக்கிறாங்க. அதுதான் ஒரு சிறந்த பாத்திரப் படைப்பு.

    Bongu movie Reader's view

    அட போங்கப்பா.. பாத்திரப் படைப்பாவது.. மன்னாங்கட்டியாவது.. நாங்க அதெல்லாம் கண்டுக்க மாட்டோம். ஹீரோன்னா பஞ்ச் பேசனும். வில்லன்னா ஹை பிட்ச "வண்டிய எடுங்கடாஆஆ"ன்னு கத்தனும் அவ்ளோதான் நம்ம லாஜிக் அப்டின்னு மனசுல வச்சிக்கிட்டு எடுக்கப்பட்ட ஒரு படம் தான் நம்ம போங்கு.

    Spoiler Alert

    ஜெயில்லருந்து வந்த நட்ராஜ் & கோ (ஒரு பொண்ணு +ரெணுடு பசங்க) எல்லா கார் கெம்பெனிகள்லயும் வேலை தேடுறாங்க. ஆனா இவங்களோட profile blacklist பண்ணப்பட்டிருக்கதால யாரும் இவங்களுக்கு வேலை குடுக்க மாட்டேங்குறாங்க. அந்த விரக்தில, ஒரு அண்ணாச்சிக்கிட்ட வேலைக்கு சேருறாங்க. அவரு இவங்களுக்கு கார் திருடுற அசைன்மெண்ட்ட குடுக்குறாரு. ரெண்டு கார் திருட்டுகள வெற்றிகரமா முடிச்ச பிறகு மதுரையில பல்க்கா பத்து கார் திருடுறதுக்கான ஆர்டர நட்ராஜ்கிட்ட குடுக்குறாரு.

    நட்ராஜ் கார் திருடப்போறது யாருன்னா மதுரை முத்துப்பாண்டியோட கசின் பிரதர் மதுரை சாதா பாண்டி வீட்டுல. அங்க போனப்புறம்தான் மதுரைப் பாண்டி ஏற்கனவே நட்ராஜோட வாழ்க்கையில விளையாண்டுருக்கது தெரியவர, அவர நட்ராஜ் எப்படி சுத்தவிட்டு, பழி வாங்குறாருங்குறதுதான் படத்தோட கதைச் சுருக்கம்,

    Bongu movie Reader's view

    கதாநாயகன் நட்ராஜ் உட்பட படத்துல எந்த கேரக்டருக்குமே ஒரு டீட்டெய்லிங் இல்லை. அவங்க சொல்லிருக்க ஒருசில விஷயங்களையும் நம்ம மனசுல நிக்கிற மாதிரி சொல்லல. ரொம்ப லைட்டா கேஷூவலா எடுத்துருக்காங்க.

    முதல்ல நட்ராஜ் ஒருத்தர்கிட்ட வேலை பாக்குறாரு.. அவர் யாரு? அவர் ஏன் கார தூக்க சொல்றாரு? அவரோட தொழில் என்ன? சரி நட்ராஜ் காரக் கடத்துனப்புறம் அந்தக் கார்ல பத்துகோடி பணம் இருக்கறத கண்டுபுடிக்கிறாரு. (sneak peak இல் ரிலீஸ் செய்யப்பட்ட காட்சி) அந்தப் பணத்த நட்டியே வச்சிக்கிட்டாரா இல்லை கார் கடத்த சொன்னவர்கிட்ட குடுத்தாரா?

    நட்ராஜ் கூட இருக்க பொண்ணு யாரு? நட்ராஜோட லவ்வரா இல்ல ஃப்ரண்டு மட்டுமா? வில்லன்னு ஒருத்தர்.. மதுரையிலயே பெரிய தாதா.. அவருக்கு காருன்னா ரொம்ப இஷ்டம். எந்தக் காரா இருந்தாலும் அத வாங்குறதுக்கு எங்க வேணாலும் போவாரு.. என்ன வேணாலும் செய்வாறுன்னு பில்ட் அப் பன்றாங்க. ஆனா அவருக்கு கார் புடிக்கும் அடுத்தவங்க சொல்லிக்கிட்டே இருக்காங்களே தவற, அவருக்கு கார் பிடிக்கும்னு காட்ட அவருக்கு எதாவது ஒரு சீன் இருக்கா? இல்லை ஏன் புடிக்கும்ங்குறதுக்கு காரணமாவது இருக்கா? அட்லீஸ்ட் ஒரு சீன்ல அவர் கார் ஓட்டுற மாதிரியாவது வைக்க வேண்டாமா? மதுரைல பெரிய ஆளுன்னு அவன நெருங்கவே முடியாதுன்னு சொல்றாங்க. ஆனா ஒரு வருஷம் முன்னாலதான் ஒரு மினிஸ்டருக்கு அள்ளக்கையா இருக்க மாதிரி காமிக்கிறாங்க.

    இப்டி இன்னும் அடுக்கிட்டே போகலாம். பவர்ஃபுல்லான காட்சின்னு எதையுமே சொல்ல முடியல. இடைவேளைல என்ன நடக்கப்போகுதுன்னு நமக்கே தெரியிது. அதுவும் ஆங்கிலப் படங்கள்ல வர்ற மாதிரி ஒரு காருக்குள்ள ஒரு சிஸ்ட்த்த வச்சிக்கிட்டு, சிசிடிவி கேமராவயெல்லாம் ஹேக் பண்ணி, "ஆல் CCTV cameras under control" ன்னு சொல்றதெல்லாம் சிரிப்பு.

    Bongu movie Reader's view

    படத்துல சொல்லிக்கிற மாதிரி இருந்த ஒரே போர்ஷன் ஜாவா சுந்தரேசன் கார திருடு போகாம பாத்துக்க வந்து செய்யிற சில அலப்பரைகள்தான். முனீஸ்காந்த்தப் பாக்க பாவமா இருக்கு.. நச நசன்னு பேசிக்கிட்டே இருக்காரு. ஆனா எதுக்குமே சிரிப்பு வரமாட்டுது. ஒரே ஒரு காட்சில வந்த மயில்சாமியும் ஏமாத்திட்டார்.

    நட்ராஜ் டீம்ல கூடவே குண்டா ஒருத்தர் இருக்காரு. ஒண்ணு ரெண்டு காட்சிகள்னா ஓக்கே. ஒரு முழுப் படத்துக்கும் சப்போர்ட்டிங் ரோல் பன்ற அளவு அவருக்கு ஸ்க்ரீன் ப்ரசன்ஸ்லாம் இல்லை. டீம் செலெக்‌ஷன்லயும் கொஞ்சம் கோட்ட விட்டுருக்காங்க.

    இதுல தவால் குல்கர்னி சுண்ணாம்பு சட்டித் தலையோட, போலீஸ் ஆஃபீசரா வந்து தனியா ஒரு ரூட்டுல போயிட்டு இருக்காரு. "யாரு பெத்த புள்ளையோ தனியே இப்புடி சுத்திக்கிட்டு இருக்கே" ன்னு பாக்க நமக்கே பாவமா இருக்கு.

    நட்டி நல்ல ஸ்க்ரீன் பிரசன்ஸ் உள்ள ஆளுதான். ஆனா கதை செலெக்‌ஷன்ல ரொம்ப கோட்ட விடுறாரு. டைட்டில்ல 'ரேர் பீஸ் நட்டி' ன்னு போடுறாங்க. ஆனா அந்த ரேர் பீஸ வச்சி ரொம்ப ஆர்டினரியா படம் எடுத்துருக்காங்க.

    இயக்குனர் தாஜ் மேக்கிங்குலயும் சரி, ஸ்க்ரிப்ட்டும் சரி இன்னும் நிறையா இம்ப்ரூவ் பன்னிக்கனும். ஒரு படத்துல காட்சிகள் நகர்றது முக்கியமில்லை. சுவாரஸ்யமா நகரனும் அதுதான் ரொம்ப முக்கியம். 'ஸ்ரீ' யோட இசை ஓக்கே. பாட்டுலாம் ரொம்ப சுமார் ரகம். BGM ல தனுஷ் நடிச்ச பொல்லாதவன் தீம் மியூசிக் ஓடிக்கிட்டு இருக்கு. கேமரா ஓக்கே.

    மொத்தத்துல கதை, திரைக்கதை, பாத்திரப் படைப்பு, வசங்கள்னு அனைத்திலுமே சுமார் ரகம்தான் இந்த போங்கு.

    -முத்து சிவா

    English summary
    Muthusiva's view on Natti Nataraj's Bongu movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X