X
கூர்க்கா

கூர்க்கா

Comedy | Drama | Thriller | 12 Jul 2019 | U | 165 Mins
Tamil

2.5 /5 Users

2 /5 Filmibeat

கூர்க்கா கதை

கூர்க்கா இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கத்தில் யோகி பாபு நடித்த நகைச்சுவை மற்றும் த்ரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் செந்தில் தயாரிக்க, ஒளிப்பதிவாளர் சதிஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் ரூபென் எடிட்டிங் பணியில், இசையமைப்பாளர் ராஜ் ஆர்யன் இசையமைத்துள்ளார். மேலும் இத்திரைப்படத்தின் இறுதிக்கட்ட எடிட்டிங் பணிகள் முடிவடைய இருப்பதாக மே 9 2019 அன்று படக்குழுவினர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவித்துள்ளனர். கதை கூர்கா வம்சாவளியை சேர்ந்த பகதூர் பாபு (யோகி பாபு) காவல் துறையில் சேர தீவிர முயற்சி செய்கிறார். ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிகிறது. காவலர் தேர்வு நடக்கும் இடத்தில் யோகி பாபுவை போலவே சொதப்பும் அண்டர்டேக்கர் எனும் நாயும் யோகிபாபுவுடன் சேர்ந்துகொள்கிறது. காவல் துறையில் வேலை நிராகரிக்கப்படும் யோகி பாபுவுக்கு செக்யூரிட்டி வேலை தருகிறார். மனோபாலா. யோகி பாபு பணியமர்த்தப்படும் அப்பார்ட்மெண்டுக்கு அருகில் அமெரிக்க தூதரக அதிகாரி எலிசாவின் வீடு இருக்கிறது. எலிசா மீது காதலில் விழும் யோகி பாபு, அவரை கரெக்ட் செய்ய முயற்சிக்கிறார். ஆனால், எலிசாவை நெருங்குவது அவ்வளவு எளிதாக இல்லை. இந்த நிலையில், எலிசா அடிக்கடி செல்லும் வணிக வளாகத்திற்கு யோகி பாபு பணிமாற்றம் செய்யப்படுகிறார். ஒருநாள் இரவில் எலிசாவை குறிவைத்து தீவிரவாதிகள் அந்த வணிகவளாகத்தை ஹை-ஜாக் செய்கிறார்கள். அப்பாவி மக்களும் யோகி பாபுவின் அமெரிக்க காதலியும் பிணைய கைதிகளாக சிக்கிக்கொள்கிறார்கள். தீவிரவாதிகள் எலிசாவை ஏன் குறிவைக்க வேண்டும்? அவர்கள் நோக்கம் என்ன? யோகி பாபு தன் காதலியையும் மக்களையும் மீட்டாரா? என்பதே மீதிக்கதை.
Read More

கூர்க்கா நடிகர்கள் & படக்குழுவினர்

கூர்க்கா அணியின் தகவல்

இயக்குனர் சாம் ஆண்டன்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை ராஜ் ஆர்யன்
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

கூர்க்கா விமர்சகர்களின் விமர்சனம்

பில்மிபீட்
படத்தில் லாஜிக் என்பது மருந்துக்குக்கூட இல்லை. காமெடி படத்துக்கு லாஜிக் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என்றாலும், நகைச்சுவையாவது தூக்கலாக இருக்க வேண்டாமா?. தமிழ் சினிமாவில் காமெடி பஞ்சம் தலைவிரித்தாடுவது கூர்கா மூலம் நன்றாக தெரிகிறது. யோகி பாபு பேசுவது அனைத்தையுமே காமெடியாக நினைக்கும் சினிமாக்காரர்களுக்கு இது ஒரு எச்சரிக்கை மணி. படத்தில் நாயகியின் பெயர் மார்க்ரெட். அதை யோகி பாபு மார்க்கெட் என உச்சரிக்கிறார். இது தான் காமெடி என்றால் படம் எவ்வளவு மொக்கையாக இருக்கும் என யூகித்துக்கொள்ளுங்கள். 'காமெடிக்கு என தனியாக ஒரு எழுத்தாளரை வைத்து வசனங்களை எழுதி, காட்சிகளை அமைத்திருந்தால் முழு படமும் காமெடியாக இருந்திருக்கும். சமூகவலைதளங்களில் அதிக அளவில் கலாய்க்கப்பட்ட விஷயங்களை படத்தில் அதிகமாக பயன்படுத்தி இருப்பது சலிப்பை தான் ஏற்படுத்துகிறது. கடைசி 20 நிமிடங்களைப் போலவே, முழுப் படமும் காமெடியாக இருந்திருந்தால் இந்த 'கூர்கா'வுக்கு மெடல் குத்தி பாராட்டியிருக்கலாம்.

கூர்க்கா திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

கூர்க்கா

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+