twitter

    விமர்சகர்கள் கருத்து

    • தமிழ் சினிமா அளவுக்கு வேறு எந்த மொழியிலும் இத்தனை ஆயிரம் காதல் படங்கள் வந்திருக்குமா என்பது தெரியவில்லை. அந்த அளவுக்கு காதலை கொண்டாடி வருபவர்கள் நம் இயக்குனர்கள். ரஞ்சித் ஜெயக்கொடியின் இந்த இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும் திரைப்படமும், அப்படி ஒரு காதல் கொண்டாட்டம் தான். ஆனால், இன்னும் எத்தனை படங்கள் வந்தாலும், காதல் என்றுமே சலிக்காது என்பதை ஆணித்தரமாக கூறுகிறது இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்.

      'முதலில் மோதல் பிறகு காதல்', 'பணக்கார பெண்ணுக்கும் ஏழை பையனுக்கும் காதல்', என ஏற்கனவே நாம் பலமுறை பார்த்து சலித்துபோன அதே ஒன்லைன் தான் இந்த படமும். ஆனால் ரஞ்சித் ஜெயக்கொடியின் திரைக்கதையும், தனித்துவமான கதாபாத்திரங்களும், ராஜன்ராதமனாலனுடன் இணைந்து அவர் எழுதிய வசனங்களும், சாமின் இசையும், கவினின் ஒளிப்பதிவும் என எல்லாம் சேர்ந்து படத்தை புதிதாக காட்டியிருக்கிறது. இன்றைய தலைமுறை இளைஞர்கள், தங்களை எளிதாக இப்படத்துக்குள் புகுத்திக் கொள்வார்கள் என்பது நிச்சயம்.

      இருப்பினும், இன்றைய இளைஞர்களை மையப்படுத்தி வரும் காதல் படங்களில் இருந்து தனித்து நிற்கிறான் இந்த இஸ்பேடு ராஜா. இவனை போல நம் ஊர் ரோமியோக்களும் யோசித்தால், நம் பெண்கள் அனைவருமே இதய ராணிகள் தான்.