X
காளி

காளி

Mystery | 18 May 2018 |
Tamil

2.5 /5 Users

3 /5 Filmibeat

காளி கதை

காளி இயக்குனர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிக்கும் அறிவியல் ரீதியான திரைப்படம். இத்திரைப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைக்க, பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிக்கிறார். கதை : அமெரிக்காவில் வசதியாக வாழும் இதய நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் பரத் (விஜய் ஆண்டனி). அவருக்கு தினமும் ஒரு கனவு வருகிறது. அதில் ஒரு பாம்பை பார்த்து மாடு மிரண்டுபோய் அங்கு விளையயாடிக் கொண்டிருக்கும் சின்ன பையனை நோக்கி ஓடி வருகிறது. இதைப்பார்க்கும் சிறுவனின் தாய், பதறிப்போய் ஓடி வருகிறார். இந்த கனவுக்கும், தனக்கும் என்ன தொடர்பு என விஜய் ஆண்டனி யோசித்துக்கொண்டிருக்கும் வேளையில், அவரது தாய்க்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. அப்போது தான் தெரிய வருகிறது தான் ஒரு தத்துப்பிள்ளை என்று. இதையடுத்து, தனது பூர்விகத்தை அறிந்து கொள்வதற்காக, தாய், தந்தையைத் தேடி இந்தியா வருகிறார் விஜய் ஆண்டனி. தமது தாய் பற்றிய விவரம் மிக எளிதாக அவருக்கு கிடைத்து விடுகிறது. அந்த விவரத்துடன் தாயை தேடிச் செல்கிறார். ஆனால் அவரது தாய் கனவில் வரும் சம்பவத்தின் போது மாடு முட்டி இறந்துவிட்டது தெரிய வருகிறது. இதையடுத்து தமது தந்தை பற்றி அறிந்து கொள்வதற்காக, தாயின் சொந்த ஊரான கனவுக்கரைக்கு விரைகிறார். கிராம மக்களுக்கு சேவை செய்ய வந்துள்ள மருத்துவராக தம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு, பொதுமக்களுக்கு சேவை செய்து கொண்டே தந்தையையும் கண்டுபிடிக்க முயல்கிறார். விஜய் ஆண்டனியின் தந்தை யார், அவரை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதுதான் மீதிக்கதை.
Read More

காளி நடிகர்கள் & படக்குழுவினர்

காளி அணியின் தகவல்

இயக்குனர் கிருத்திகா உதயநிதி
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை விஜய் ஆண்டனி
தயாரிப்பாளர் பாத்திமா விஜய் ஆண்டனி
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

காளி விமர்சகர்களின் விமர்சனம்

tamil.filmibeat.com
வழக்கமான தமிழ் சினிமா தான். ஆனால் வித்தியாசமான திரைக்கதை மூலம் அதை சொல்ல முயன்றிருக்கிறார் கிருத்திகா. அதில் ஓரளவுக்கு வெற்றியும் பெற்றிருக்கிறார். விஜய் ஆண்டனியின் தந்தை யார் என்பதை கடைசி வரை சஸ்பென்சாக வைத்திருப்பதும் நல்ல திரைக்கதை யுத்தி. விஜய் ஆண்டனி தமது தந்தையை தேடும் முயற்சியில் வரும் பிளாஷ்பேக் காட்சிகள் எல்லாவற்றிலும் அவரையே பயன்படுத்தி இருப்பது புதிய முயற்சி. ஆனால் சிறிது நேரத்திற்கு பிறகு சலிப்பை ஏற்படுத்தி விடுகிறது. அதேபோல அமெரிக்காவில் வசதியாக வாழும் ஒரு பெரிய டாக்டர், தன்னுடைய பூர்வீகத்தை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என நினைத்து இந்தியா வருவதற்கு சொல்லப்பட்ட காரணம் அவ்வளவு வலுவாக இல்லை. அதுவும் எந்த ஒரு வசதியும் இல்லாத கிராமத்திற்கு வந்து பொதுசேவை செய்வதெல்லாம் கொஞ்சம் அதிகம் தான். அமெரிக்க டாக்டர், தாய், தந்தையை தேடும் இளைஞர், பிளாஷ்பேக் காட்சிகளில் ரொமான்ஸ் நாயகன், ஆக்ஷன் ஹீரோ என அனைத்து பரிமாணங்களையும் சரியாக செய்திருக்கிறார் விஜய் ஆண்டனி. அளவுக்கு அதிகமாகவும், இல்லை குறைவாகவும் இல்லை. ஆனால் எல்லா கேரக்டர்களையும் நானே தான் பண்ணுவேன் என அடம் பிடிப்பது சரிதானா பாஸ். திரைக்கதைக்கு செலுத்திய கவனத்தை, கதையிலும் செலுத்தியிருந்தால், காளி இன்னும் கொஞ்சம் உக்கிரமாக இருந்திருக்கும்.

காளி திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

காளி

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+