X
தமிழ் » திரைப்படங்கள் » கபிலவஸ்து
கபிலவஸ்து

கபிலவஸ்து

Drama | Romance | 08 Mar 2019 | U | 111 Mins
Tamil

2.5 /5 Users

2 /5 Filmibeat

கபிலவஸ்து கதை

கபிலவஸ்து இயக்குனர் நேசம் முரளி இயக்கத்தில் புதுமுக நடிகர்கள் நடித்திருக்கும் காதல் திரைப்படம். இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். கதை  பொது கழிப்பிடத்தில் குழந்தையை பெற்று, அங்கேயே விட்டுச் செல்கிறார் மீரா கிருஷ்ணன். அங்கு வேலை செய்பவர் குழந்தையை எடுத்து வளர்க்க, அங்கையே வளர்ந்து பெரியளாகும் நாயகன் நேசம் முரளி, பொது கழிப்பிடத்தை கவனித்து வருகிறார். சாலையோரத்தில் தாங்கும் நாயகி நந்தினியின் நாடோடி குடும்பம் பொது கழிப்பிடத்திற்கு அருகே தங்குகிறது. இவர்களுக்கு பணம் சேர்த்து ஒரு வாடகை வீட்டில் குடியேற வேண்டும் என்று விருப்பம் உள்ளது. பின்னர் சாலையோரத்தில் தாங்கும் நந்தினியின் குடுபத்திற்கு பிரச்சனைகள் வருகிறது. இதனை கண்டு நந்தினிக்கு உறுதுணையாக இருக்கிறார் நேசம் முரளி. இதிலிருந்து இவர்களுக்குள் காதல் ஏற்படுகிறது. ஒரு நாள் அந்த பிரச்சனையால் நேசம் முரளி ஜெயிலுக்கு செல்கிறார். பின் தண்டனை காலம் முடிந்து திரும்பி வரும் நேசம் முரளி, சாலையோரத்தில் தங்கியிருந்த நந்தினி, அவர் குடும்பத்துடன் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைகிறார். பின்னர் நாயகியை தேடி செல்கிறார் நாயகன். இறுதியில் நாயகியை நாயகன் கண்டுபிடித்தாரா? நாயகியுடன் இணைந்தாரா? என்பதே மீதிக்கதை.
Read More

கபிலவஸ்து நடிகர்கள் & படக்குழுவினர்

கபிலவஸ்து அணியின் தகவல்

இயக்குனர் நேசம் முரளி
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை ஸ்ரீகாந்த் தேவா
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

கபிலவஸ்து விமர்சகர்களின் விமர்சனம்

பில்மிபீட்
நாம் பரிதாபத்தோடு கடந்துபோகும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை அவலத்தை பதிவாக்கி அதனை நாட்டின் முதல் குடிமகன் வரை எடுத்து சென்ற நேசம் முரளிக்கு முதலில் பாராட்டுகள். கழிவறைகளை சுத்தம் செய்வது, அங்கேயே வாழ்வது என எந்த சங்கடமும் படாமல், நடைபாதைவாசியாகவே வாழ்ந்திருக்கிறார் நேசம் முரளி. அவரது தங்கையாக வரும் பேபி ஐஸ்வர்யா, மனைவி நந்தினி, பாட்டி வான்மதி, பழைய இரும்புக்கடை பாய் பாண்டு, போலீசாக மன்சூர் அலிகான், குப்பை பொறுக்கும் கோவை செந்தில் என அனைவருமே தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்கள். வெறும் ஆவணமாக, ஒரு பதிவாக மட்டுமில்லாமல் நடைபாதைவாசிகளின் வாழ்க்கையை கண்முன் விரிக்கிறது கபிலவஸ்து. காதல், பாசம், ஆக்‌ஷன், காமெடி எல்லாம் சேர்த்து ஒரு முழு நீள படமாக வந்துள்ளது படம்.

கபிலவஸ்து திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

கபிலவஸ்து

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+