X
கூத்தன்

கூத்தன்

Drama | 11 Oct 2018 |
Tamil

2.6 /5 Users

2 /5 Filmibeat

கூத்தன் கதை

கூத்தன் இயக்குனர் வெங்கி ஏ எல் இயக்கத்தில் ராஜ்குமார் நடித்த காதல் திரைப்படம்.  கதை : ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் கலையரசியின் (ஊர்வசி) மகன் ரானா (ராஜ்குமார்). தனது பிலிம் நகர் காலனியில் உள்ள இளைஞர்களுடன் சேர்ந்து பேட்டரி பாய்ஸ் எனும் டான்ஸ் குரூப் வைத்து நடனமாடி வருகிறார். பரத கலைஞர் தேவியின் (கீரா) தங்கை ஸ்ரீ லக்ஷமிக்கு (ஸ்ரீஜிதா கோஷ்) வெஸ்டர்ன் டான்சில் வென்று, தங்கள் குடும்ப எதிரி கிருஷ்ணாவின் (நாகேந்திர பிரசாத்) முகத்தில் கரிபூச வேண்டும் என்பது லட்சியம். இதற்கிடையே ஸ்ரீஜிதாவுக்கும், ராஜ்குமாருக்கும் இடையே நட்பு உருவாகி காதலாக மலர்கிறது. இந்நிலையில், தாங்கள் குடியிருக்கும் பிலிம் நகர் காலனியை ஒரு கோடி ரூபாய் கொடுத்து மீட்க வேண்டிய சூழல் நாயகனுக்கு ஏற்படுகிறது. இதற்காக ஆசிய அளவில் நடக்கும் டான்ஸ் போட்டியில் கலந்துகொள்கிறார். நடனத்துறையில் கோலோச்சி நிற்கும் நாகேந்திர பிரசாத்தை வென்று, ராஜ்குமார் எப்படி பிலிம் நகரை மீட்கிறார் என்பது தான் படம்.
Read More

கூத்தன் நடிகர்கள் & படக்குழுவினர்

கூத்தன் அணியின் தகவல்

இயக்குனர் வெங்கி ஏ எல்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை NA
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

கூத்தன் விமர்சகர்களின் விமர்சனம்

tamil.filmibeat.com
டி.ராஜேந்தர் குரலில் 'மங்கிஸ்தா கிங்கிஸ்தா' செம குத்து குத்த வைக்கிறது. கூத்தனம்மா கூத்து, காதல் காட்டுமிராண்டி பாடல்கள் கேட்பதற்கு மிக அருமை. சொல்லாத சொல்லாத, தீராத தீண்டல்கள் பாடல்கள் நல்ல மெலடிக்கள். பாடல்களை சிறப்பாக கொடுத்த இசையமைப்பாளர் பால்ஸ் ஜி, பின்னணி இசையில் சொதப்பியிருக்கிறார். ஏற்கனவே நாம் பார்த்து பழகிய அதே டான்ஸ் பட டெம்ப்ளேட்டில் மற்றொரு படமாக வந்திருக்கிறான் இந்த கூத்தன். காதல், சென்டிமெண்ட், காமெடி, நிறைய டான்ஸ் என ஒரு முழுமையான கமர்சியல் படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் ஏ.எல்.வெங்கி. வில்லனாக புதிய அவதாரம் எடுத்திருக்கும் நாகேந்திர பிரசாத்தை தமிழ் சினிமா வரவேற்கிறது. படத்தின் கதை களம் தனது ஏரியா என்பதால், இறங்கி அடித்திருக்கிறார். இன்னும் கொஞ்சம் எக்ஸ்பிரஷன்ஸ்களை மெருகேற்றினால் நல்ல கம்பேக்காக இருக்கும் நாகு. தனது வழக்கமான நடிப்பால் படத்தை ஓரளவுக்கு தாங்கி பிடிக்கிறார் ஊர்வசி. அதேபோல ஸ்ரீ ரஞ்சனியும் நிறைவாக செய்திருக்கிறார். இவர்களை தவிர, பாக்யராஜ், மனோபாலா, ராம்கி, கலா மாஸ்டர், ஜூனியர் பாலையா, கவிதாலயா கிருஷ்ணன், சஞ்சய் அஸ்ரானி, ஆடம்ஸ், பிரியதர்ஷினி, ரம்யா என ஒரு நட்சத்திர பட்டாளமே இருக்கிறது. எல்லோருமே ஊறுகாய் போல ஒவ்வொரு காட்சியில் வந்துவிட்டு போகிறார்கள். கூத்தன் என்றால், கூத்து எனும் ஆடல் கலையில் வல்லவன் என்று பொருள் கூறுகிறது விக்கிபீடியா. ஆனால் இந்த கூத்தன் வல்லவன் இல்லை. கூத்தன் படம் பார்ப்பவர்களில் 18 பேருக்கும் குலுக்கல் முறையில் ஒரு பவுன் தங்கம் பரிசாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார் இப்படத்தின் தயாரிப்பாளர் நீல்கிரிஸ் முருகன். எனவே படத்தை பார்த்து தங்கம் வெல்வதா வேண்டாமா என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.

கூத்தன் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.6 /5 Your Rating

கூத்தன்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+