X
தமிழ் » திரைப்படங்கள் » நெடுநல்வாடை
நெடுநல்வாடை

நெடுநல்வாடை

Drama | 15 Mar 2019 | U | 122 Mins
Tamil

2.5 /5 Users

4.5 /5 Filmibeat

நெடுநல்வாடை கதை

நெடுநல்வாடை இயக்குனர் செல்வகண்ணன் இயக்கத்தில் நடிகர் பூ ராமு, மைம் கோபி, இளங்கோ, அஞ்சலி நாயர் நடித்திருக்கும் காதல் மற்றும் விவசாய திரைப்படம். இத்திரைப்படத்தினை பி ஸ்டார் ப்ரோடுக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளர் ஜோஸ் ஃபிராங்க்ளின் இசையமைத்துள்ளார். கதைக்கரு ஒரு தாத்தாவுக்கும் பேரனுக்கும் இடையே உள்ள பாசப் பிணைப்பையும், பிரிவின் வலியையும், மண் மண(ன)ம் வீச பேசுகிறது நெடுநல்வாடை. கதை சிங்கிலிபட்டி கிராமத்தில் விவசாயம் செய்து வருபவர் செல்லையா (பூ ராமு). வீட்டைவிட்டு ஓடிப்போன இவரது மகள் பேச்சியம்மாள் (செந்தி), ஒருகட்டத்தில் கணவனைவிட்டுப் பிரிந்து தனது இருகுழந்தைகளுடன் மீண்டும் தாய் வீட்டிற்கு வருகிறாள். மகனின் எதிர்ப்பையும் மீறி மகளுக்கும், பேரன், பேத்திக்கும் அடைக்கலம் தருகிறார் செல்லையா. சதா வெறுப்பை உமிழும் மாமா கொம்பையாவை (மைம் கோபி) தோற்கடிக்க, நன்றாக படித்து வேலைக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தை, பாசத்தோடு ஊட்டி பேரன் இளங்கோவை வளர்க்கிறார் தாத்தா. அதே எண்ணத்தோடு வளரும் இளங்கோவுக்கு, தன்னைச் சுற்றி சுற்றி வந்து காதலிக்கும் அமுதா (அஞ்சலி நாயர்) மீது ஈர்ப்பு வருகிறது. ஆனால் தாத்தா சொல்படி தனது குடும்பத்துக்காக காதலை தியாகம் செய்கிறான். ஒருகட்டத்தில் வெளிநாடு செல்லும் இளங்கோ, சொந்த ஊருக்கே திரும்பி வராமல் அங்கேயே இருந்து விடுகிறார். இதனால் மனவேதனை அடையும் செல்லையா, மரணப்படுக்கையில் விழுகிறார். தாத்தாவை பார்க்க பேரன் வந்தாரா, அவரது காதல் என்ன ஆனது என்பது தான் உணர்வுகள் சங்கமிக்கும் நெடுநல்வாடை.
Read More

நெடுநல்வாடை நடிகர்கள் & படக்குழுவினர்

நெடுநல்வாடை அணியின் தகவல்

இயக்குனர் செல்வகண்ணன்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை ஜோஸ் ஃபிராங்க்ளின்
தயாரிப்பாளர் பி ஸ்டார் ப்ரோடுக்ஷன்ஸ்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

நெடுநல்வாடை விமர்சகர்களின் விமர்சனம்

பில்மிபீட்
தமிழ் இலக்கியத்தின் முக்கிய நூல்களுள் ஒன்று, பிரிவைப் பற்றி பேசும் நெடுநல்வாடை. மிக பொருத்தமான இந்த தமிழ் சொல்லை, தன் படத்தலைப்பாக தேர்வு செய்த இயக்குனருக்கு முதலில் பாராட்டுகள். சொல்ல வந்ததை தெளிவாக சொல்லி இருக்கிறார் செல்வகண்ணன். தமிழ் சினிமாவில் பெரும்பாலான படங்கள் குடும்ப உறவுகளை பற்றியும், பாசத்தை பற்றியும், காதலை மையமாக வைத்தும் உருவாக்கப்பட்டவை தான். ஆனால் நெடுநல்வாடை இவற்றில் இருந்து தனித்துவமாக நிற்கிறது. காரணம் இப்படம் சொல்லும், உறவின் வலியும், காதலும், பாசமும், நேசமும், தியாகமும், நம் வாழ்வின் ஏதோ ஒரு கட்டத்தில் நாம் சந்திருத்திருக்கக் கூடிய ஒன்று. அந்த வகையில் நம்முடன் எளிதில் ஒட்டிக்கொள்கிறது இந்த நெடுநல்வாடை. ஆனால் 90 எம்எல் போதையில் தள்ளாடிக்கொண்டிருக்கும் தமிழ் சினிமாவை தெளிய வைக்க, நெடுநல்வாடை போன்ற படங்கள் மிகவும் அவசியமானவை. மண்ணும், மண் மனம் சார்ந்த பதிவுகளும் தான், காலம் கடந்து நிற்கக் கூடியவை. அந்த வகையில், இந்த நெடுநல்வாடை, தவிர்க்கக் கூடாத சினிமா.

நெடுநல்வாடை திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

நெடுநல்வாடை

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+