ஷூட்டிங் ஆரம்பித்த பத்தே நாட்களில் ஓடிப்போன ஹீரோயின்... அடம்பிடித்த அட்டக்கத்தி தினேஷ் நாயகி!

நெடுநல்வாடை படத்தின் நாயகன், நாயகி படப்பிடிப்பு ஆரம்பித்த பத்தே நாட்களில் ஓடிப்போய்விட்டதாக அப்படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்தார்.

Recommended Video

Nedunalvadai: லோ பட்ஜெட் தொழில்நுட்ப கலைஞர்களை வைத்து உருவாக்கப்பட்ட படம் நெடுநல்வாடை- வீடியோ

சென்னை: லோ பட்ஜெட் தொழில்நுட்ப கலைஞர்களை வைத்து உருவாக்கப்பட்ட ஹைவோல்டேஜ் படம் நெடுநல்வாடை என அப்படத்தின் இயக்குனர் செல்வக்கண்ணன் கூறினார்.

புதுமுக இயக்குனர் செல்வக்கண்ணன் இயக்கியுள்ள படம் நெடுநல்வாடை. இவருடன் உடன் படித்த 50 நண்பர்கள் பணமுதலீடு செய்து, பி ஸ்டார் புரடக்‌ஷன்ஸ் என்ற பேனரில் இந்த படத்தை தயாரித்துள்ளனர். சுமார் 2ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டு பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்ட இப்படம் அடுத்த வாரம் மார்ச் 15ம் தேதி ரிலீஸாகிறது. பிரபல தயாரிப்பாளர் எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் P.மதன் இப்படத்தை ரிலீஸ் செய்ய உதவி புரிந்து வருகிறார்.

இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா மற்றும் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய தயாரிப்பாளர்களில் ஒருவரான சுந்தர், படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்த பத்தே நாட்களில், ஹீரோயின் அதிதி மேனன் நடிக்க மறுத்து ஓடிப்போய்விட்டதாகக் கூறினார்.

பட்ஜெட் எகிறிவிட்டது

பட்ஜெட் எகிறிவிட்டது

இதுகுறித்து அவர் பேசியதாவது, "படம் எடுக்க முன்வந்தபோது நாங்கள் நினைத்த பட்ஜெட்டை விட பல மடங்கு தாண்டிவிட்டது. ஆனாலும் நண்பர் செல்வக்கண்ணன் எவ்வளவு நேர்மையானவர் என்பது எங்களுக்குத் தெரியும் என்பதால் எதையும் பொருட்படுத்தாமல் நாங்கள் தொடர்ந்து செலவு செய்து இப்படத்தை முடித்தோம். இப்போதும் கூட இந்தப் படத்திலிருந்து ஒரு பைசா கூட திரும்பி வராவிட்டாலும் இயக்குநர் மீது எங்களுக்கு இருக்கும் ப்ரியங்களும் நட்பும் அப்படியே இருக்கும்.

பாதியில் ஓடிய ஹீரோயின்

பாதியில் ஓடிய ஹீரோயின்

எங்களுக்கு சினிமா பற்றி தெரியாது. படம் ஆரம்பித்த 10 நாட்களில் அப்போது ஹீரோயினாக நடித்த அதிதி மேனன், நடிக்க மறுத்து ஓடிப்போய்விட்டார். அப்போது அவர் அபிசரவணனுடன் இருந்தார். நாங்கள் அபிசரவணணிடம் பேசினோம். இருப்பினும் அவர் ஒப்புக்கொள்ளவில்லை. இதையடுத்து புதிதாக ஒரு ஹீரோயினை வைத்து மீண்டும் படப்பிடிப்பு நடத்தி படத்தை முடித்துள்ளோம்' என அவர் கூறினார்.

பொய் சொல்லவில்லை

பொய் சொல்லவில்லை

பின்னர் பேசிய இயக்குநர் செல்வக்கண்ணன்,"இந்தப் படம் எத்தனையோ முறை டிராப் ஆகவேண்டியது. ஆனால் நடந்த உண்மைகள் எதையும் மறைக்காமல் பிரச்சினைகள் அத்தனையையும் நண்பர்கள் வாட்ஸ் அப்பில் அனுப்பிக்கொண்டே இருந்தேன். அவர்களுக்கு பிராக்டிக்கலான சினிமா குறித்து எதுவுமே தெரியாதென்றாலும் நான் பொய் சொல்லவில்லை என்ற ஒரே காரணத்துக்காக தொடர்ந்து உதவி படத்தை முடிக்க உதவினார்கள்.

ரசிகர்கள் மீது நம்பிக்கை

ரசிகர்கள் மீது நம்பிக்கை

நல்ல படங்களை ரசிகர்கள் ஒருநாளும் கைவிட்டதில்லை என்ற நம்பிக்கையில் மிகவும் தரமான ஒரு படத்தை நல்ல டெக்னீஷியன்களுடன் இணைந்து உருவாக்கியிருக்கிறேன். நெடுநல்வாடை' லோ பட்ஜெட் டெக்னீஷியன்களின் ஹைவோல்டேஜ் படம்" என்றார்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X