For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  இந்த வருடம் இவ்ளோ படம் ரிலீஸ்... ஆனாலும் இந்த ஆஹா படங்களை அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது

  By
  |

  சென்னை: தமிழ் சினிமாவின் வியாபாரம் அப்படி இப்படி இருந்தாலும் ஒவ்வொரு வருடமும் உருவாகும் தமிழ்ப் படங்களின் எண்ணிக்கை மட்டும் குறைவதில்லை. இந்த வருடம் 185 படங்கள் ரிலீஸ் ஆகி இருக்கின்றன.

  இதில் வணிக ரீதியாக 35 படங்கள்தான் வெற்றி பெற்றிருக்கின்றன என்கிறார் தயாரிப்பாளர் தனஞ்செயன். ஆனால், பெரிய ஹிட்டடிக்கவில்லை என்றாலும் இந்த வருடம் கவனிக்க வைக்கப்பட்ட சிறு பட்ஜெட் படங்கள் அதிகம். அந்த வகையில் கடந்த வருடத்தை விட இந்த வருடம் தமிழ் சினிமாவுக்கு நல்ல காலம்.

  ரஜினி, அஜித், விஜய், தனுஷ், கார்த்தி என பெரிய ஹீரோ, பெரிய பட்ஜெட் படங்கள் எதுவும் இல்லாமல் இந்த வருடம் கவனிப்பட்ட படங்களின் லிஸ்ட் இது.

  என்னது 'தலைவர் 168' லுக் லீக் ஆகிடுச்சா? வைரலாகும் ரஜினியின் கிராமத்து லுக்குக்கு காரணம் இதுதான்!என்னது 'தலைவர் 168' லுக் லீக் ஆகிடுச்சா? வைரலாகும் ரஜினியின் கிராமத்து லுக்குக்கு காரணம் இதுதான்!

  அமலா பாலின் ஆடை

  அமலா பாலின் ஆடை

  அமலா பால் நடித்த ஆடை படம் ரசிகர்களால் அதிகமாகப் பாராட்டப்பட்டது. ரத்னகுமார் இயக்கி இருந்த படம், ஒரு பெண் சமூகத்தால் எப்படி காட்சிப் பொருளாகப் பார்க்கப்படுகிறாள் எனும் கேள்வியை சிறப்பாக எழுப்பியிருந்தது. ஜெகதீச சுப்பு இயக்கி இருந்த பக்ரீத் படத்தில் விக்ராந்த் நடித்திருந்தார். வணிக ரீதியாக இந்தப் படம் வெற்றி பெறவில்லை என்றாலும் கதைக்காவும் நடிப்புக்காகவும் இந்தப் படம் கவனிக்கப்பட்டன.

  கேடி என்கிற கருப்புத்துரை

  கேடி என்கிற கருப்புத்துரை

  மதுமிதா இயக்கிய 'கேடி என்கிற கருப்புத்துரை' பெரிதாகப் பேசப்படவில்லை என்றாலும் தமிழில் முக்கியமான படம். வயதானதால் புறக்கணிக்கப்படும் பெரியவர் ஒருவர் வீட்டை விட்டு வெளியேறி ஒரு கோவிலில் தஞ்சமடைகிறார். அங்கு கிடைக்கும் சிறுவனின் நட்பும் இருவருக்குமான பயணமும்தான் கதை. நேர்த்தியாக இயக்கப்பட்ட படம்.

  கடைசி குண்டு

  கடைசி குண்டு

  பா.இரஞ்சித் தயாரிப்பில் அவர் உதவியாளர் அதியன் ஆதிரை இயக்கிய படம், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு. கரை ஒதுங்கிய ஒரு குண்டு. அதைத் துரத்தும் ஆயுதத் தரகர், போலீஸ், பத்திரிகையாளர்... இவர்களுக்கிடையில் அந்த குண்டு என்னவாகிறது? அதன் பின் இருக்கும் அரசியலை சொல்லும் படம். தினேஷின் நடிப்பு யப்பா! ஊடகங்களால் பாராட்டப்பட்ட படம்.

  காளிதாஸ்

  காளிதாஸ்

  பரத் நடிப்பில் வெளியான காளிதாஸ், அவருக்கு ஒரு ரீ என்ட்ரியை கொடுத்திருக்கிறது. ஶ்ரீ செந்தில் இயக்கிய இந்த சைக்காலஜி திரில்லர், பாராட்டை மட்டுமல்ல, வணிக ரீதியிலான வெற்றியையும் கொடுத்திருக்கிறது என்பது ஸ்பெஷல்.

  கேரக்டரான எலி

  கேரக்டரான எலி

  மான்ஸ்டர்- ஒரு எலியை கேரக்டராக வைத்துக்கொண்டு, அதையொட்டி கதை பின்னி, அதற்கு ஏற்றவாறு கதாபாத்திரங்களை வடிவமைத்திருந்தார் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன். எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கரின் நடிப்பும் பேசப்பட்டது.

  மெஹந்தி சர்க்கஸ்

  மெஹந்தி சர்க்கஸ்

  சரவண ராஜேந்திரனின் மெஹந்தி சர்க்கஸ், இனிமையான காதலைச் சொன்ன படம். வணிக ரீதியாக பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும் ரசிக்கப்பட்ட கதை. பாடல்களும் காட்சியமைப்பும் அழகான காதல் உணர்வை தந்தன.

  நெடுநல்வாடை

  நெடுநல்வாடை

  அறிமுக இயக்குனர் செல்வகண்ணன் இயக்கிய 'நெடுநல்வாடை'யை, இந்த வருடத்தின் சிறந்த படங்களின் லிஸ்ட்டில் சேர்க்கலாம். ஒரு கிராமத்து வாழ்க்கையை மிகவும் யதார்த்தமாக சொன்ன விதத்திலும் பூ ராமுவின் நடிப்பிலும் இந்தப் படம் நிமிர்ந்து நின்றது.

  மிக மிக அவசரம்

  மிக மிக அவசரம்

  சின்ன பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு வெளியான, மிக மிக அவசரம், பெண்களின் பிரச்னையை பேசிய படம். தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இயக்கி இருந்தார். சாந்தகுமார் இயக்கத்தில் வந்த மகாமுனி, பெரிய ஹிட்டாகவில்லை என்றாலும் கவனிக்க வைத்தது.

  பேரன்பு

  பேரன்பு

  ஒரு மாற்றுத் திறனாளி பெண்ணின் பருவ வளர்ச்சியை ஒரு தந்தை அன்பால் எப்படி எதிர் கொள்கிறார் என்பதை சொன்ன படம், ராமின் பேரன்பு. மம்மூட்டி, சாதனாவின் நடிப்பும் ராமின் இயக்கமும் பாராட்டப்பட்டது.

  தொரட்டி

  தொரட்டி

  கோபிநாத் இயக்கியிருந்த ஜீவி, யதார்த்தமான படமான தோழர் வெங்கடேசன், ஆடுமேய்ப்பவர்களின் வாழ்வை சொன்ன தொரட்டி, விருதுகள் பெற்ற டுலெட் ஆகியவையும் இருக்கின்றன இந்த லிஸ்ட்டில்.

  English summary
  Sources said, 185 Tamil Movies has been released in this year. Only 35 films gets profit.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X