twitter
    Tamil»Movies»Thirumanam»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • திருமண வைபவங்களை மிக ஆடம்பரமாக நடத்துவது அவசியமானது தானா என்ற கேள்வியை முன் வைக்கிறது சேரனின் 'திருமணம்' சில திருத்தங்களுடன் திரைப்படம். பல்வேறு பிரச்சினைகளின் காரணமாக சில ஆண்டுகளாக திரைப்படங்களில் கவனம் செலுத்தாமல் இருந்த சேரன், பெரிய இடைவெளிக்கு பின் திருமணம் மூலம் மீண்டும் வந்திருக்கிறார். வெல்கம்பேக் இயக்குனர் சேரன்.

      படத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் சுகன்யாவினுடையது தான். அதற்கு சிறிதும் குறை வைக்காமல் சிறப்பாக செய்திருக்கிறார். தம்பி மீது அதிக அக்கறை எடுத்துக்கொள்வது, சித்தப்பா எம்எஸ் பாஸ்கர் மீது பாசம் காட்டுவது, கஞ்சத்தனமான வேலைகளை செய்யும் சேரனை அவமானப்படுத்துவது என கிடைக்கும் கேப்பில் எல்லாம் கெட்டிமேளம் கொட்டி, அப்ளாஸ் அள்ளுகிறார்.

      பொதுவாக சேரன் படத்தில் பாடல்கள் சூப்பர் ஹிட்டாகும். ஆனால் இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம் என்பது தான் ஏமாற்றம். இன்னும் நிறைய மெனக்கெடனும் சித்தார் விபின். பின்னணி இசையில் நாதஸ்வரம், மிருதங்கள் போன்ற வாத்தியங்களை அதிகம் பயன்படுத்தி, பார்வையாளர்களை திருமண மூடிலேயே வைத்திருக்கிறார்கள் இசையமைப்பாளர்கள் சபேஷ் - முரளி.