Live: பிக் பாஸ் சீசன் 6 : பிக் பாஸ் சீசன் 6ல் மக்களில் ஒருவராக டிக் டாக் பிரபலம் தனலட்சுமி பங்கேற்பு
சென்னை: விஜய் டிவி மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் இன்று முதல் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி கோலாகல துவக்கவிழாவுடன் தொடங்கி உள்ளது.
கடந்த 5 சீசன்களையும் வெற்றிகரமாக நடத்தி முடித்த கமல்ஹாசன் 6வது சீசனையும் தொகுத்து வழங்க களமிறங்கி உள்ளார். பிக் பாஸ் அல்டிமேட் போலவே இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியும் 24 மணி நேரம் ஒளிபரப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
ரச்சிதா, ஜிபி முத்து, அசீம், ராம் ராமசாமி, ஆயிஷா, ஜனனி, சிவின் கணேசன், விஜே மகேஷ்வரி, மணிகண்டன், அமுதவாணன், அசல் கோலார், ராபர்ட் மாஸ்டர், ஆர்யன் தினேஷ், விஜே கதிரவன், மெட்டி ஒலி சாந்தி அரவிந்த், குயின்ஸி, நிவாஷினி, விஜே விக்ரமன், ஷெரினா, டிக்டாக் பிரபலம் தனலட்சுமி உள்ளிட்ட 20 பேர் போட்டியாளராக பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. யாரெல்லாம் உள்ளே போறாங்கன்னு பொறுத்திருந்து பார்ப்போம்.. அவர்கள் பின்னணியையும் தெரிந்து கொள்வோம்!









கமல் காலில் விழுந்து வணங்கிய ராபர்ட் மாஸ்டர்


பிக் பாஸ் சீசன் 6ல் இரண்டாவது போட்டியாளாராக கானா பாடகர் அசல் கோலார் வீட்டுக்குள் நுழைந்தார்


பிக் பாஸ் வீட்டில் தனது குடும்பத்தினரை கமல்ஹாசன் முன்னாடி அறிமுகப்படுத்தினார் ஜி.பி. முத்து




Click it and Unblock the Notifications





























