பிக் பாஸ் வீட்டில் அடியெடுத்து வைத்த டிக் டாக் பிரபலம் ஜிபி முத்து… இனி அதகளம் தான் போங்க!
சென்னை: விஜய் டிவி தயாரிக்கும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்று மாலை 6 மணிக்கு தொடங்குகிறது.
உலக நாயகன் கமல் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் 10 பெண் போட்டியாளர்கள், 9 ஆண் போட்டியாளர்கள், திருநங்கை ஒருவர் என மொத்தம் 20 பேர் பங்கேற்கின்றனர்.
டிக் டாக், இன்ஸ்டா ரீல்ஸ் மூலம் பிரபலமான ஜிபி முத்துவும் இவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் சீசன் 6
மக்களிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்களை கடந்துள்ளது. விஜய் டிவி தயாரிப்பில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சிக்கு தாறுமாறாக டிஆர்பி கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது. ஒரு வீட்டுக்குள் சக போட்டியாளர்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதே இதன் உளவியல் விளையாட்டு. வேடிக்கையாவும் விளையாட்டாகவும் நடைபெறும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வரவேற்பும் எதிர்ப்பும் ஒருசேர காணப்படுகிறது. இந்நிலையில், 6வது சீசன் இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது.

மொத்தம் 20 போட்டியாளர்கள்
கடந்த சில தினங்களாகவே பிக் பஸ் நிகழ்ச்சியின் ப்ரோமோக்கள் இணையத்தில் வைரலாகி வந்தன. இந்நிகழ்ச்சியில் இந்த முறை மொத்தம் 20 பேர் போட்டியாளர்களாக பங்கேற்கின்றனர். 10 பெண்கள், 9 ஆண்கள், ஒரு திருநங்கை என மொத்தம் 20 பேர் பிக் பாஸ் வீட்டுக்குள் அடியெடுத்து வைத்துவிட்டனர். அதேபோல், பிக் பாஸ் சீசன் 6ல் பொதுமக்களும் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், அவர்கள் எப்படி, எந்த வகையில் பங்கேற்பார்கள் என வெயிட் பண்ணிதான் பார்க்க வேண்டும். இந்நிலையில், பிக் பாஸ் சீசன் 6ல் டிக் டாக் பிரபலம் ஜிபி முத்துவும் கலந்துகொள்கிறார்.

நெல்லை தமிழ் ஜிபி முத்து
கொரோனா ஊரடங்கின் போது டிக் டாக், இன்ஸ்டா ரீல்ஸ் என சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை பகிர்ந்து வந்தார் ஜிபி முத்து. அதுவும் சுத்தமான நெல்லை தமிழில் "ஏலே யாம்லே இப்படி பண்றியோ... பேதிலபோவான்.... அட செத்தப் பயலுவளா... நாரப் பயலுவளா... எல என்னல இது... மெண்டல் பயலுவளா..." என ஜிபி முத்துவின் வீடியோக்கள் வெளியாகி மக்களுக்கு பெரிய எண்டர்டெயின்மெண்ட்டாக அமைந்தது. ஜிபி முத்துவின் பேச்சு வெள்ளந்தியாக இருந்தாலும், சில நேரங்களில் இரட்டை அர்த்தங்களிலும் பேசி நெட்டிசன்களிடம் வாங்கிக் கட்டிக் கொள்வார்.

பிக் பாஸில் சம்பவம் இருக்கு
இந்நிலையில், பிக் பாஸ் சீசன் 6ல் ஜிபி முத்து கலந்துகொள்வது ரசிகர்களுக்கு தக்காளித் தொக்காக அமைந்துள்ளது. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் இனி கண்டெண்ட்களுக்கு குறை இருக்காது என இப்போதே கமெண்ட்ஸை போட்டுத் தள்ளுகின்றனர். கடந்த ஆண்டே பிக் பாஸ் வீட்டுக்கு ஜிபி முத்து செல்கிறார் என சொல்லப்பட்டன. ஆனால், "அந்த வீட்டுக்கெல்லாம் மனுஷன் போவானாலே"-ன்னு பேசியிருந்த ஜிபி முத்து இந்த சீசனில் வேறு வழியில்லாமல் என்ட்ரி ஆகிவிட்டார்போல என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். அதேபோல், பலரும் ஜிபி முத்து தான் டைட்டில் வின் பண்ணுவார் எனவும் கருத்து கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











