Don't Miss!
- News வெள்ளிக்கிழமை இதை மட்டும் யாருக்கும் தராதீங்க.. எந்தெந்த பொருளை வெள்ளி கிழமை தானம் தரலாம் தெரியுமா?
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Automobiles சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
தீபாவளிப் படங்கள்... இப்பவே மூணு ரெடி!
சென்னை: இந்த தீபாவளிக்கு இப்போதே மூன்று திரைப்படங்கள் தொடை தட்டிக் களம் இறங்கிவிட்டன.
அவை ஆரம்பம், இரண்டாம் உலகம் மற்றும் ஆல் இன் ஆல் அழகு ராஜா.
இந்த மூன்று படங்களைத் தவிர மேலும் சில படங்களும் கடைசி நேரத்தில் களமிறங்கக் காத்திருக்கின்றன.
ஆரம்பம்
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள படம் ஆரம்பம். ரொம்ப நாளாக எடுக்கப்பட்டு வரும் இந்தப் படத்துக்கு சமீபத்தில்தான் தலைப்பு அறிவித்தார்கள். அஜீத்துடன் ஆர்யா, நயன்தாரா, டாப்சி நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இரண்டாம் உலகம்
ரூ 60 கோடி செலவில் செல்வராகவன் மிக நீண்ட அவகாசம் எடுத்து உருவாக்கிவரும் படம் இரண்டாம் உலகம். இதில் ஆர்யா நாயகன். அனுஷ்கா நாயகி. வித்தியாசமான கதைக் களத்துடன் வரும் படம் இது.
ஆல் இன் ஆல் அழகுராஜா
கார்த்தி - காஜல் அகர்வால் நடித்துள்ள ஆல் இன் ஆல் அழகுராஜாவை ராஜேஷ் எம் இயக்கியுள்ளார். பாஸ் என்கிற பாஸ்கரனுக்குப் பின் அவர் இயக்கியுள்ள படம் இது. ஞானவேல் ராஜா தயாரிப்பு இது. கார்த்திக்கு பெரியஹிட் தேவைப்படும் நிலையில் இந்தப் படம் வருகிறது.
மேலும் சில படங்கள்...
இவை தவிர வணக்கம் சென்னை, ஆனந்தத் தொல்லை உள்பட சில படங்களும் தீபாவளிக்கு வெளியாகக் காத்திருக்கின்றன.