»   »  தீபாவளி... ஆரம்பம் 31, பாண்டிய நாடு 1, ஆல் இன் ஆல் அழகுராஜா 2!

தீபாவளி... ஆரம்பம் 31, பாண்டிய நாடு 1, ஆல் இன் ஆல் அழகுராஜா 2!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்த தீபாவளிக்கு 3 புதிய படங்கள் வெளியாவது நூறு சதவீதம் உறுதி செய்யப்பட்டுவிட்டது.

அஜீத்தின் ஆரம்பம் படம் அக்டோபர் 31ம் தேதியே வெளியாகிறது. தீபாவளி வாரத்தின் வசூலை இரண்டு நாட்களை அட்வான்சாகவே அள்ள முடிவெடுத்து இப்படி முன்கூட்டி வெளியிடுகிறார்கள். 200க்கும் அதிகமான அரங்குகள் இந்தப் படத்துக்கு கிடைத்துள்ளன.

Arrambam

விஷாலின் பாண்டிய நாடு படம் நவம்பர் 1-ம் தேதி வெளியாகிறது. படத்துக்கு நல்ல அரங்குகள் கிடைத்திருப்பது விஷாலுக்கு குஷியைத் தந்துள்ளது. எல்லாம் உதயநிதி ஸ்டாலின் கைங்கர்யம் என்கிறார்கள்.

கார்த்தியின் ஆல் இன் ஆல் அழகுராஜா வெளியாவது நவம்பர் 2-ம் தேதி, தீபாவளியன்று. தீபாவளிப் படங்களிலேயே அதிக அரங்குகள் கிடைத்திருப்பது ஆல் இன் ஆல் அழகுராஜாவுக்குதான். 300 ப்ளஸ்! அது ஞானவேல்ராஜாவின் முன்கூட்டிய திட்டமிடல்!

ஒரு வகையில் இந்த தீபாவளிக்குத்தான் சுவாரஸ்யமான படங்கள் வெளியாவது போன்ற தோற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பாண்டிய நாடு மற்றும் ஆல் இன் ஆல் அழகுராஜா ஆகிய இரு படங்களுமே வித்தியாசமான முயற்சியாக இருக்கும் என்ற 'டாக்' பரவலாக உள்ளது அந்தப் படங்களுக்கு சாதகமாக உள்ளது.

ஆரம்பம் படத்தைப் பொறுத்தவரை அதன் மீது எந்த அபிப்பிராயமும் இல்லை. படம் நன்றாக இருக்குமா.. த்ரில்லரா, ஆக்ஷனா? என எதுவுமே யாருக்கும் தெரியாது. இதுவும் ஒரு வகையில் நல்லதுதான் என்பது அஜீத்தின் கருத்து.

English summary
Three movies, Arrambam, Pandiya Naadu and All in All Azhaguraja are confirmed for this Diwali and released the final theater list.
Please Wait while comments are loading...