»   »  அஜீத் கண்ணாடியை கழட்டச் சொன்ன அக்ஷராவுக்கு இப்போ நல்ல நேரம்!

அஜீத் கண்ணாடியை கழட்டச் சொன்ன அக்ஷராவுக்கு இப்போ நல்ல நேரம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஆரம்பம் படத்தில் அஜீத்தின் கூலிங் கிளாஸை கழட்டச் சொல்லி கட்டளை போடும் மத்திய அமைச்சர் மகளாக வரும் பெண்ணை நினைவிருக்கிறதா....

அவர்தான் அக்ஷரா... மும்பை வரவு. நாடோடிகள் படத்தின் இந்திப் பதிப்பான ரங்கர்ஸ் படத்தில் நடித்திருக்கிறார்.

அடிப்படையில் விளையாட்டு வீராங்கனையான அக்ஷரா, இப்போதல்லாம் வாயைத் திறந்தால் அஜீத் புராணம்தான்!

அஜீத் ரசிகை

அஜீத் ரசிகை

'நான் அஜீத் சாருடைய தீவிர ரசிகை. அவருடன் நடிக்க வேண்டும் என்று மிக ஆவலாய் காத்து கொண்டு இருந்தவள். என் நல்ல நேரம் அந்த தருணம் என் திரை உலக பயணத்தின் ஆரம்பத்திலே அமைந்துவிட்டது. அஜீத் சாருடைய ரசிகர்கள் பலம் திரை அரங்கில் அந்த காட்சியை பார்க்கும் போது தான் தெரிந்தது.

பயமாக இருந்தது...

பயமாக இருந்தது...

உண்மையில் படம் வெளியான பிறகு எனக்கு பயமாக இருந்தது. திமிருடன் ரொம்ப நக்கலாக அவரை கண்ணாடியைக் கழட்டச் சொல்லும் அந்த காட்சியில் நடிக்கும் போதே அஜீத் சார்தான் என்னை தைரியமூட்டினார். இப்போது எனக்கு இந்த அளவுக்கு நல்ல பெயர் கிடைக்க அவரே காரணம்.

சிறந்த மனிதர்

சிறந்த மனிதர்

அஜீத் ஒரு மிகச் சிறந்த மனிதர் என்பதை அவருடன் பழகிய நாட்களில் புரிந்து கொண்டேன். ஆரம்பம் நாட்களை நான் என்றும் நினைவில் கொள்வேன் .

பரதக் கலைஞர்

பரதக் கலைஞர்

அடிப்படையில் நான் ஒரு பரத கலைஞர். சிறு வயதிலிருந்தே நடிப்பில் எக்கச்சக்க ஆர்வம். நடிகைகளில் கரீனா கபூரை ரொம்பப் பிடிக்கும். அவருடைய மெல்லிய இடை வாகும் அவர் தன்னை கட்டு கோப்பாய் வைத்து இருக்கும் அழகையும் நான் என்றுமே ரசிப்பவள் .

கைப்பந்து வீராங்கனை

கைப்பந்து வீராங்கனை

விளையாட்டு துறையில் எனக்கு மிகவும் ஈடுபாடு உண்டு. நான் தேசிய அளவில் கை பந்து போட்டியில் கலந்து கொண்டவள். விளையாட்டு துறையில் உள்ளதனாலோ என்னவோ எனக்கு மன உறுதியும் திடமும் அதிகம். அந்த உறுதியோடு தமிழ் திரை உலகில் ஒரு நிரந்தரமான முக்கிய இடத்தை பிடிப்பேன் என நம்புகிறேன்," என்றார்.

English summary
How does it feel to be some body who asks Ajith to remove his glasses and subsequently invite the wrath of his fans across the world ...The dusky Akshara reveals how she felt , who she is and what she feels on being a part of 'Arrambam' the biggest money spinner of recent days.
Please Wait while comments are loading...