நான் அப்பவே சொன்னேன்...இப்போ நடந்துடுச்சு...அப்படி என்ன சொன்னார் சரத்குமார்?

சென்னை : சூரிவம்சம் பட விழாவில் தான் சொன்னது இன்று நடந்து விட்டதாகவும், தனது கணிப்பு சரியானதில் தனக்கு பெரிய அளவில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார். இதனால் சரத்குமார் அப்படி என்ன சொன்னார். யாரை பற்றி அல்லது எதை பற்றி சொன்னார் என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

வில்லன், கேரக்டர் ரோல்களில் நடித்து பிரபலமான சரத்குமார், பிறகு தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களில் ஒருவராகவும், ஆக்ஷன் ஹீரோவாகவும் வளர்ந்தார். பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்த சரத்குமார் தற்போது அப்பா கேரக்டர்களிலும், அழுத்தமான கேரக்டர்களிலும் அதிகம் தேர்வு செய்து நடித்து வருகிறார்.

 சரத்குமார் பகிர்ந்த தகவல்

சரத்குமார் பகிர்ந்த தகவல்

சினிமா, வெப் சீரிஸ் என பிஸியாக நடித்து வரும் சரத்குமார், தற்போது தளபதி 66 படத்தில் விஜய்க்கு அப்பா ரோலில் நடித்து வருகிறார். இந்நிலையில் தளபதி 66 படம் பற்றியும், படத்தின் பூஜை போட்டது முதல் தற்போது நடக்கும் ஷுட்டிங் வரை விஜய்யுடன் நடந்த பல சுவாரஸ்யமான தகவல்களை தனது சமீபத்திய பேட்டியில் கூறி உள்ளார்.

ஆகஸ்ட் வரை நடக்கும்

ஆகஸ்ட் வரை நடக்கும்

இதில் தளபதி 66 படம் பற்றி கூறிய சரத்குமார், தளபதி 66 படத்தின் ஷுட்டிங் ஆகஸ்ட் மாதம் வரை நடைபெறும். இது மிகவும் பவர்ஃபுல்லான கதை. இந்த கதை அனைத்து தரப்பு ஆடியன்ஸ்களையும் கவரக் கூடியதாக இருக்கும். விஜய்யுடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

 விஜய் தான் அடுத்த சூப்பர்ஸ்டார்

விஜய் தான் அடுத்த சூப்பர்ஸ்டார்

மேலும் அவர் கூறுகையில், தளபதி 66 படத்தின் முகூர்த்த பூஜையின் போது நானும் விஜய்யும் நிறைய விஷயங்கள் பற்றி பேசினோம். அப்போது சூர்யவம்சம் படத்தின் 250வது நாள் விழா சென்னை கமலா தியேட்டரில் நடைபெற்றது. அப்போது நாங்கள் சந்தித்தது பற்றியும் பேசினோம். அந்த விழாவில் நான் மேடையில் பேசிய போது கூறினேன், விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று. அன்று நான் சொன்னது போலவே நடந்து விட்டது.

Recommended Video

Raadhika Sarathkumar Exclusive | புது முயற்சிகள் எனக்கு எப்பவும் புடிக்கும் | Filmibeat Tamil
அன்னிக்கே நான் சொன்னேன்

அன்னிக்கே நான் சொன்னேன்

எப்படி அப்படி சரியாக கணித்து சொன்னேன் என தெரியவில்லை. ஆனால் நான் சரியாக கணித்துள்ளதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. இதை அவரும் நினைவு வைத்திருந்து பேசியது மகிழ்ச்சியாக இருந்தது என்றார் சரத்குமார். விஜய் பற்றி சரத்குமார் சரியாக கணித்து சொன்ன விஷயத்தை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருவதுடன், தளபதி 66 படம் பற்றிய அடுத்த அப்டேட் எப்போது வரும் என ரசிகர்கள் ஆவலாக கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X