ராம் சரண் தனது பெத்தி படத்துக்காக கெவின் குண்டாவை பாடிகார்டாக நியமித்துள்ளார் என தகவல்கள் பரவிய நிலையில், கடந்த 4 ஆண்டுகளாகவே தனது பாதுகாவலராக கெவின் குண்டா உள்ளார் என ராம் சரண் மனம் திறந்து பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications
நடிகர் ராம் சரணின் பாடிகார்டுக்கே ஒரு பாடிகார்ட் தேவைப்படும் அளவுக்கு ஃபேமஸ் ஆகிவிட்டார். விஜய் பாடிகார்டை விட காஸ்ட்லி என்று கூறுகின்றனர்.
ராம் சரண் தனது பெத்தி படத்துக்காக கெவின் குண்டாவை பாடிகார்டாக நியமித்துள்ளார் என தகவல்கள் பரவிய நிலையில், கடந்த 4 ஆண்டுகளாகவே தனது பாதுகாவலராக கெவின் குண்டா உள்ளார் என ராம் சரண் மனம் திறந்து பேசியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற பெத்தி நிகழ்ச்சியில் கூட வெஸ்டின் ஹோட்டலில் ராம் சரணுக்கு காவலாக நின்றவாறே நின்று அனைவரையும் கண்காணித்துக் கொண்டிருந்தார் கெவின் குண்டா.
எம்எம்ஏ ஃபைட்டரான இவரது உண்மையான பெயர் அப்து காதிர் சோவே. இவர் ஆப்பிரிக்காவின் காம்பியாவில் பிறந்தாலும் இத்தாலியின் புளோரன்ஸ் நகரில் தற்போது ராஜ வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.
எம்எம்ஏ சாம்பியனாக குத்துச்சண்டை போட்டிகளில் கலக்கி வந்த இவரை தனது பர்சனல் மெய் பாதுகாவலாக ராம்சரண் அதிக சம்பளம் கொடுத்து அழைத்து வந்துள்ளார்.
மெகா பவர்ஸ்டார் ராம்சரண் மற்றும் அவரது குடும்பத்துக்கு கருப்பசாமி போல காவல் காத்துக் கொண்டிருக்கிறார் இந்த கெவின் குண்டா.
தற்போது இன்ஸ்டாகிராமிலும் இவருக்கு ஏகப்பட்ட ராம்சரண் ரசிகர்கள் ஃபாலோயர்களாக மாறியுள்ளனர். விஜய்யின் பாடிகார்ட் மூசாவை விட இவரு தான் காஸ்ட்லி என்கின்றனர்.
ராம்சரணின் பாதுகாவலர் ஒரு நாளைக்கு 4 லட்சம் ரூபாய் சம்பளமாக வாங்குகிறார் என தகவல்கள் வெளியான நிலையில், அவருக்கே பாதுகாப்பு கொடுக்கும் அளவுக்கு வைரலாகி விட்டார்.