bredcrumb

குடும்பத்தோட படியேறி திருப்பதி ஏழுமலையானை தரிசித்த அருண் விஜய்.. மகளும், மகனும் செம க்யூட்!

By Mari S
| Updated: Tuesday, January 13, 2026, 12:05 [IST]

நடிகர் அருண் விஜய் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் திருப்பதி மலையேறி ஏழுமலையானை தரிசித்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

Arun VIjay Family photos
1/8

பொங்கல் திருநாளை முன்னிட்டு தனது குடும்பத்துடன் திருப்பதிக்கு சென்று பெருமாளை வணங்கி அவரது ஆசிர்வாதத்தை பெற்றுள்ளார் அருண் விஜய்.

Arun VIjay Family photos
2/8

திருப்பதி ஏழுமலையானை காணும் பக்தர்கள் கீழ் திருப்பதியில் இருந்து மேல் திருப்பதி வரை நடந்து செல்வார்கள். ஆனால், பல சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட விஐபிக்கள் மற்றும் பொதுமக்களே பலரும் நேரடியாக வாகனத்தில் மேல் திருப்பதிக்கு சென்று வரும் நிலையில், தனது குடும்பத்துடன் நடந்தே சென்று ஏழுமலையானை தரிசித்துள்ளார்.

Arun VIjay Family photos
3/8

பிரபல நடிகர் என்கிற பந்தா எல்லாம் இல்லாமல் சாமானிய மக்களுடன் மக்களாக திருப்பதிக்கு அருண் விஜய் நடந்து செல்லும் காட்சிகள் வைரலாகி வருகின்றன.

Arun VIjay Family photos
4/8

வழியில் மான்களை எல்லாம் பார்த்து அதனுடன் புகைப்படம் எடுத்துள்ளார் வணங்கான். 

Arun VIjay Family photos
5/8

அருண் விஜய்யின் மனைவி, மகள் மற்றும் மகன் மூவரும் ஹோட்டல் ஒன்றில் அமர்ந்திருக்கும் காட்சி.

Arun VIjay Family photos
6/8

திருப்பதி ஏழுமலையானை மலையேறி தரிசித்த நிலையில், குடும்பமாக போட்டோ எடுத்துக் கொண்டனர். அம்மாவை விட மகளும் மகனும் அப்பாவை போல உயரமாக வளர்ந்து வருகின்றனர்.

Arun VIjay Family photos
7/8

கடந்த ஆண்டு வணங்கான், ரெட்ட தல என 2 படங்களில் அருண் விஜய் நடித்திருந்தார். இந்த ஆண்டும் அவருக்கு நல்ல ஆண்டாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Arun VIjay Family photos
8/8

அருண் விஜய்யின் மகன் அர்னவ் திருப்பதி படிகட்டுகளில் ஓடி வரும் காட்சி செம க்யூட்டாக உள்ளது.

X