bredcrumb

என் குழந்தைங்க ரொம்பவே அவஸ்த்தை படுறாங்க.. ஸ்ருதி ரங்கராஜ் வெளியிட்ட புகைப்படங்கள்!

By Mari S
| Published: Friday, November 7, 2025, 11:26 [IST]

என் மகன்கள் ரொம்பவே வருத்தத்தில் உள்ளார்கள் என மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி ஸ்ருதி ரங்கராஜ் மகன்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

Shruthi Rangaraj sons photos
1/5

குக் வித் கோமாளி நடுவரும் சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜுக்கும் அவரது 2வது மனைவி ஜாய் கிரிஸில்டாவுக்கும் இடையே சட்ட போராட்டம் வலுத்து வரும் நிலையில், கணவருக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருகிறார் முதல் மனைவி ஸ்ருதி பிரியா. 

Shruthi Rangaraj sons photos
2/5

மாதம்பட்டி ரங்கராஜ், ஸ்ருதி பிரியா தம்பதியினருக்கு 2 மகன்கள் இருந்த நிலையிலும், அவர் 2வதாக ஜாய் கிரிஸில்டாவை ரகசிய திருமணம் செய்துக் கொண்டு அவருக்கும் ஒரு ஆண் குழந்தையை வாரிசாக கொடுத்துள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

Shruthi Rangaraj sons photos
3/5

ஜாய் கிரிஸில்டா தொடர்ந்து மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிராக போராடி வரும் நிலையில், தனது 2 மகன்களும் இந்த பிரச்சனையால் ரொம்பவே அவஸ்த்தை படுகின்றனர். ஆனால், அவர்கள் அமைதியாகவும் வலிமையாகவும் உள்ளனர் என பதிவிட்டுள்ளார் ஸ்ருதி ரங்கராஜ்.

Shruthi Rangaraj sons photos
4/5

பட்டாயாவுக்கு சுற்றுலா சென்ற புகைப்படங்களை வெளியிட்டு இப்படியொரு போஸ்ட்டை ஸ்ருதி ரங்கராஜ் வெளியிட்ட நிலையில், சோஷியல் மீடியாவில் இதை பகிர்ந்து ரொம்ப சோகமாக இருக்காங்கம்மா என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். 

Shruthi Rangaraj sons photos
5/5

மாதம்பட்டி ரங்கராஜ் உங்களுக்கு செய்தது துரோகம் என்பதை கூட நீங்க மறுத்துவிட்டீர்களே என்றும் நீங்க பட்ட கஷ்டத்துக்கு மாதம்பட்டி எப்போதும் உங்களுடனும் உங்கள் மகன்களுடனே இருப்பார் என்றும் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+