X
முகப்பு » பிரபலங்கள் » வசுந்தரா தாஸ்
வசுந்தரா தாஸ்

வசுந்தரா தாஸ்

Singer/Actress
பயோடேட்டா:  வசுந்தரா தாஸ் இந்திய திரைப்பட நடிகை மற்றும் பாடகர் ஆவார். இவர் கமல் ஹாசனின் "ஹே ராம்" திரைப்படத்தில் நடித்து தமிழில் நாயகியாக அறிமுகமானவர். அதற்கு முன்னர் பல வெற்றி பாடல்களை பாடி பிரபலமாகியுள்ளார். பிறப்பு  வசுந்தரா தாஸ், கர்நாடகாவில் உள்ள ஒரு தமிழ் குடும்பத்தில் பிறந்துள்ள இவர், பெங்களூரில் தனது பள்ளி மட்டும் கல்லூரி படிப்பினை முடித்து. பின்னர் தனது பாட்டியை தொடர்ந்து இசையில் ஆர்வம் கொண்டுள்ள இவர் "ஹிந்துஸ்தானி கிளாசிக்கல் மியூசிக்" என்பதனை கற்றறிந்துள்ளார். இவர் தனது கல்லூரி காலத்தில் இருந்து பல பாடல்களை பாடி பிரபலமானவர், இதனை தொடர்ந்து சினிமாவில் பாட வாய்ப்பு கிடைத்ததும் திரைப்படங்களில் பாடி இந்திய முழுவதும் பிரபலமானார். இவர் தமிழ், கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம், மலையாளம் மற்றும் ஸ்பானிஷ் என 6 மொழிகளை தெளிவாக கற்றறிந்தவர். திரையுலக அனுபவம் வசுந்தரா தாஸ், 1999ம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையில் வெளியான முதல்வன் திரைப்படத்தில் " ஷகாலக்க பேபி " பாடலை பாடியுள்ளார். இந்த பாடல் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று பிரபலமானது. இதனை தொடர்ந்து இவர் 2000ம் ஆண்டு ரிதம், குஷி, ஆசாத்(தெலுங்கு) படங்களில் பாடல்கள் பாடி பிரபலமானார். குறிப்பாக குஷி படத்தில் இவர் பாடிய " கட்டிப்புடி கட்டிப்புடிடா " பாடல் தமிழகத்தில் பல இளைஞர்களால் ரசிக்கப்பட்டு சர்ச்சைக்கு உள்ளாகி பிரபலமானது. தமிழ் திரையுலகில் ஒரு சில பாடல்களை பாடி பிரபலமாகிய இவர், 2000ம் ஆண்டு கமல்ஹாசன் இயக்கிய " ஹே ராம் " திரைப்படத்தில் நாயகியாக நடித்து தமிழ் மற்றும் ஹிந்தி திரையுலகில் நடிகையாக அறிமுகமாகியுளார். பின்னர் 2001ம் ஆண்டு தமிழில் அஜித் குமார் நடித்த " சிட்டிசன் " திரைப்படத்தில் நாயகியாக நடித்து தமிழ் திரையுலகில் புகழ் பெற்றுள்ளார்.  சிட்டிசன் திரைப்படத்திலும் ஒரு சில பாடல்கள் பாடி அசத்தியுள்ள இவர், தமிழ் திரைப்பட ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகினாலும் இப்படத்திற்கு பின்னர் தமிழில் எந்த திரைப்படமும் நாயகியாக நடிக்கவில்லை. கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் முன்னணி நடிகையாக பணியாற்றியும், பாடகராக பல பாடல்களை பாடி திரையுலகில் பணியாற்றியுள்ளார்.
மேலும் படிக்க

வசுந்தரா தாஸ் திரைப்படங்கள்

திரைப்படம் இயக்குனர் வெளிவரும் தேதி
முருகன் ஏ ஜெ 12 Nov 2004
சரவண சுப்பையா 08 Jun 2001
கமல் ஹாசன் 18 Feb 2000

வசுந்தரா தாஸ்: வயது, திரைப்படங்கள், குடும்பம் & தனிப்பட்ட விவரங்கள்

வசுந்தரா தாஸ்

பெயர் வசுந்தரா தாஸ்
பிறந்த தேதி 27 Oct 1977
வயது 49
பிறந்த இடம் பெங்களூர்
முகவரி
மதம்
தேசம்
உயரம்
ராசி
பொழுதுபோக்கு

வசுந்தரா தாஸ் நிகர மதிப்பு

நிகர மதிப்பு

வசுந்தரா தாஸ் பிரபலம்

வசுந்தரா தாஸ் புகைப்படங்கள்

ஸ்பாட்லைட் பிரபலங்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+