Don't Miss!
- News
ஆஆ.. இது வேற நடக்குதா.. ஒரே வார்த்தையில் அதிர செய்த "சொமேட்டோ" ஊழியர்.. அந்த CEO-வே ஆடிப்போயிட்டாராமே
- Education
NAAN MUDHALVAN SHORT FILM FESTIVAL 2023:குறும்பட திருவிழா போட்டியில் முதல் பரிசு ரூ.50 ஆயிரம்...!
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி திருமணத்திற்கு முன் இந்த விஷயங்களை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க... இல்லனா பிரச்சினைதான்!
- Finance
தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள அழுத்தம்.. ஆபரண தங்கம் விலை குறையுமா..நிபுணர்களின் கணிப்பு?
- Travel
உலகின் 7வது பழமையான நாடு இந்தியா – முதலிடத்தில் இருப்பது இந்த நாடா?
- Technology
Jio-விற்கு செக்மேட்.. பிரபலமான 3 ப்ரீபெய்ட் திட்டங்களில் கூடுதல் நன்மையை சேர்த்த Airtel.. அதென்ன திட்டங்கள்?
- Automobiles
புதுசு கண்ணா புதுசு! டியோவின் இடத்தை காலி பண்ண வருகிறது ஹீரோவின் புதிய ஸ்கூட்டர்... பெயரே வேற லெவல்ல இருக்கு!
- Sports
"ஒரே ஒரு குறைதான்.. சரி செய்தால் நம்.1 பவுலர் ஆகலாம்".. உம்ரானுக்கு முகமது ஷமி முக்கிய அட்வைஸ்!
அல்லு அர்ஜுனுக்கு பிடித்த விஜய் படங்கள் என்னென்ன தெரியுமா.. அவரே சொன்ன பதில்!
சென்னை : நடிகர் விஜய் சர்சதேச அளவில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் என்பது தெரிந்த விஷயம்தான்.
ரசிகர்களை மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் பல சினிமா பிரபலங்களையும் விஜய் கவர்ந்துள்ளார். பல பிரபலமான ஹீரோக்களையும் விஜய் கவர்ந்துள்ளார்.
தெலுங்கிலும் மகேஷ்பாபு, பிரபாஸ், அல்லு அர்ஜுன் உள்ளிட்ட பிரபலங்களையும் பல ஹீரோயின்களுக்கும் பேவரிட் என்றால் அது விஜய்தான்.
லைஃப்
டைம்
செட்டில்மென்ட்
தான்
போல..
அர்ஜுன்
தாஸை
காதலிக்கும்
ஐஸ்வர்யா
லக்ஷ்மி..
க்யூட்
பிக்!

நடிகர் விஜய்
நடிகர் விஜய் நடிப்பில் வாரிசு படம் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. பிரபல தெலுங்குப்பட இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் வெளியான இந்தப் படம் ஒரே வாரத்தில் சர்வதேச அளவில் 210 கோடி ரூபாய்களை வசூலித்து சாதனை புரிந்தது. படத்தில் குடும்ப சென்டிமெண்ட், ஆக்ஷன், காமெடி என பல தளங்களில் ரசிகர்களை கவர்ந்திருந்தார் விஜய்.

வாரிசு படம்
சர்வதேச அளவில் வெளியாகி வசூல்மழை பொழிந்த வாரிசு படத்தில் நேஷனல் க்ரஷ் ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடி சேர்ந்திருந்தார். மேலும் சரத்குமார், ஜெயசுதா, ஷாம், பிரபு உள்ளிட்ட பிரபலங்களும் விஜய்யுடன் இணைந்து நடித்திருந்தனர். தெலுங்கிலும் வாரிசுடு என்ற பெயரில் வெளியான இந்தப் படம் தெலுங்கு ஆடியன்சையும் வெகுவாக கவர்ந்தது.

ஏராளமான ரசிகர்கள்
சர்வதேச அளவில் சிறப்பான ரசிகர்களை கொடுத்துவரும் விஜய் சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களையும் பெற்றுள்ளார். மேலும் சர்வதேச அளவில் பிரபலங்களும் விஜய்க்கு ரசிகர்களாக உள்ளனர். தென்னிந்திய அளவிலும் விஜய்க்கு தெலுங்குப்படம் உள்ளிட்ட மொழிகளிலும் ரசிகர்கள் காணப்படுகின்றனர்.

அல்லு அர்ஜுன் பாராட்டு
மகேஷ்பாபு, பிரபாஸ், அல்லு அர்ஜுன் உள்ளிட்ட தெலுங்குப்பட ஹீரோக்கள் மட்டுமின்றி, தெலுங்குப்பட ஹீரோயின்களும் விஜய்யின் ரசிகர்களாக உள்ளனர். பல இன்டர்வியூக்களில் அவர்கள் இதை வெளிப்படுத்தியுள்ளனர். இதனிடையே தெலுங்குப்பட ஹீரோ அல்லு அர்ஜுனும் தன்னுடைய சமீபத்திய இன்ட்ர்வியூவில் இதை குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் ஹீரோக்களுக்கு பாராட்டு
அவர் தனது சமீபத்திய பேட்டியில் பழைய ஜெனரேஷனில் கமல் மிகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளதாகவும் தொடர்ந்து விஜய் தன்னுடைய சிறப்பான படங்களை கொடுத்ததாகவும் தொடர்ந்து தற்போது தனுஷ், சிம்பு உள்ளிட்டவர்கள் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், சிவகார்த்திகேயனும் சிறப்பான நடிப்பை டாக்டர் உள்ளிட்ட படங்களில் கொடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

அல்லு அர்ஜுனை ஈர்த்த விஜய்
விஜய்யின் துப்பாக்கி, கத்தி மற்றும் தெறி போன்ற படங்கள் தன்னை வெகுவாக ஈர்த்துள்ளதாகவும் அல்லு அர்ஜுன் தெரிவித்துள்ளார். விஜய் மாஸ் படங்களை கொடுப்பதில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் அல்லு அர்ஜுன் குறிப்பிட்டுள்ளார். தற்போது விஜய்யின் வாரிசு படம் வெளியாகியுள்ள நிலையில், அல்லு அர்ஜுனுக்கு விஜய்யின் இந்தப் படங்கள் பிடித்துள்ளது சிறப்பாக பார்க்கப்படுகிறது.