பறந்த விசில்.. ஒரு சைகைதான்.. ரசிகர்களை கட்டுப்படுத்திய அஜித்.. விஜய்யை இழுத்து போட்டு அடிக்கிறாங்களே
சென்னை: அஜித் நடிப்பு, கார் ரேஸ் என இரட்டை குதிரையில் சவாரி செய்துவருகிறார். கடைசியாக அவர் குட் பேட் அக்லி, விடாமுயற்சி ஆகிய படங்களில் நடித்திருந்தார். அடுத்ததாகவும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கிறார். அதேபோல் ரேஸிங்கிலும் பிஸியாக இருக்கும் அஜித் இப்போது ஸ்பெயினில் முகாமிட்டிருக்கிறார். இந்நிலையில் தன்னை பார்த்து விசில் அடித்த ரசிகர்களை ஒரே சைகையில் அவர் கட்டுப்படுத்திய வீடியோ ட்ரெண்டாகியிருக்கிறது.
அஜித்குமார் கடந்த பல வருடங்களாக டாப் ஹீரோக்களில் ஒருவராக திகழ்ந்துகொண்டிருக்கிறார். வருடத்துக்கு ஒரு படத்தில் மட்டும் நடித்துவந்த அவர் இந்த வருடத்தில் மட்டும் குட் பேட் அக்லி, விடாமுயற்சி ஆகிய இரண்டு படங்களில் நடித்தார். இரண்டு படங்களில் விடாமுயற்சி கைவிட்டுவிட்டது. அடுத்ததாகவும் அவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். அந்தப் படம் பற்றிய மேலதிக தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கார் ரேஸில் பிஸி: இதற்கிடையே அவருக்கு கார் ரேஸில் அதீத ஆர்வம் என்பது அனைவருக்குமே தெரியும். அவரது கரியர் நல்லபடியாக போய்க்கொண்டிருந்த நிலையில் ரேஸில் தீவிர கவனம் செலுத்தி சில விபத்துக்களை சந்தித்தார். அதன் காரணமாக அவரின் மார்க்கெட்டும் கொஞ்சம் தடுமாறியது. பிறகு சுதாரித்துக்கொண்ட அவர் சினிமாவில் மட்டும் கவனத்தை செலுத்தினார். தற்போது மீண்டும் கார் ரேஸில் அவரது கவனம் திரும்பியிருக்கிறது.

பந்தயம் அடிக்கும் அஜித்: அந்தவகையில் துபாய் உள்ளிட்ட நாடுகளில் நடந்த கார் ரேஸில் தனது ரேஸிங் டீமுடன் களமிறங்கி பந்தயம் அடித்தார். அவரது வெற்றி இந்தியாவில் கார் ரேஸ் மீதான ஆர்வம் இளைஞர்களுக்கு அதிகரிக்கும் என்ற நம்பிக்கை பலரிடமும் எழுந்திருக்கின்றது. இப்போது அவர் ஸ்பெயினில் முகாமிட்டிருக்கிறார். விரைவில் நடக்கவிருக்கும் ரேஸில் தனது டீமுடன் கலந்துகொள்ளவிருக்கிறார். இதிலும் ஏகே வெற்றி பெற்று கெத்து காட்ட வேண்டும் என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.
கட்டுப்படுத்திய அஜித்: இந்நிலையில் ஸ்பெயினில் கார் ரேஸ் நடைபெறும் இடத்தில் அஜித் இருந்தார். அப்போது அவரை பார்த்த ரசிகர்கள் ஆர்வ மிகுதியிலும், மகிழ்ச்சியிலும் விசில் அடிக்க தொடங்கினார்கள். இதனை எதிர்பார்க்காத ஏகே, 'இப்படியெல்லாம் செய்யக்கூடாது' என்று கண்டிப்பு கலந்த பக்குவத்துடன் விரலை வைத்து சைகை காண்பித்தார். அதை கவனித்த ரசிகர்கள் உடனடியாக அமைதியானார்கள். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
விஜய்க்கு விழும் அடி: ட்ரெண்டாவது மட்டுமின்றி விஜய்யையும் விமர்சிக்க தொடங்கிவிட்டார்கள் ஒருதரப்பினர். அதாவது சமீபத்தில் அவர் கரூருக்கு சென்றபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தார்கள். அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விஜய்யின் அலட்சியம்தான் இதற்கு காரணம் என்று சொல்லப்பட்டாலும், அவரது ரசிகர்கள் கரூர் மட்டுமின்றி திருச்சி, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளிலும் மரம், மின் கம்பங்களில் ஏறுவது என எல்லை மீறிக்கொண்டுதான் இருந்தார்கள்.
அதனை விஜய் அப்போதே கட்டுப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் அவரோ ரசிகர்கள் அப்படி செய்வதை ரசிக்கும்படிதான் நடந்துகொண்டார். அவருடன் திரைத்துறைக்கு வந்த அஜித்துக்கு இருக்கும் பக்குவம் விஜய்க்கு இல்லாமல் போனது வருத்தத்துக்குரிய ஒன்றுதான் என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள். இந்த விவகாரமும் சோஷியல் மீடியாவில் புதிய பஞ்சாயத்தை ஏற்படுத்தியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











