»   »  தமிழுக்குத் தாவும் இலியானா

தமிழுக்குத் தாவும் இலியானா

Subscribe to Oneindia Tamil


தமிழா, வேண்டவே வேண்டாம் என்று ரொம்பவே பிகு செய்து வந்த இலியானா இப்போது தமிழ்ப் படங்களில் நடிக்க நான் ரெடி, சம்பளத்தைக் குறைத்துக் கொள்ளவும் தயார் என்று கோலிவுட் பக்கம் ஓலை அனுப்பி வைத்து வாய்ப்புக்காக வெயிட்டிங்கில் இருக்கிறாராம்.

தமிழில் திரிஷா பின்னி எடுக்கிறார் என்றால், தெலுங்கில் இலியானா. கொஞ்ச காலத்திற்கு முன்பு வரை தெலுங்கிலும் திரிஷாதான் நம்பர் ஒன்னாக இருந்தார். ஆனால் இலியானா வந்த பிறகு அவரது நிலைமை அங்கு கொஞ்சம் ஆட்டம் கண்டது.

இருந்தாலும் சமாளித்துக் கொண்டு தமிழிலும், தெலுங்கிலும் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டிருந்தார் திரிஷா. இடையில் இலியானா, திரிஷாவை ஓவர்டேக் செய்தார்.

இதனால் தமிழ் பக்கம் கவனம் செலுத்தினார் திரிஷா. முன்பை விட அதிகமாகவே தமிழில் தீவிரமாக இருந்தார் திரிஷா. இனி தெலுங்கில் திரிஷா அவ்வளவுதான் என்று கூட சிலர் கூற ஆரம்பித்தனர்.

இதனால் இலியானா கூட அப்பாடா, நிம்மதியாப் போச்சு என்ற தைரியத்தில் இருந்தார். ஆனால் திடீரென மறுபடியும் தெலுங்கில், பிசியாக ஆரம்பித்தார் திரிஷா.

தமிழைப் போலவே தெலுங்கிலும் இப்போது திரிஷாவுக்கு நிறையப் படங்கள் உள்ளதாம். இதனால் இலியானா, கிலியாகிப் போய்க் கிடக்கிறார்.

தன்னை நாடி வந்த பலரும், திரிஷா பக்கம் மறுபடியும் தலையைத் திருப்ப ஆரம்பித்துள்ளதால், அப்செட் ஆகியுள்ளாராம் இலியானா. புதிதாக திரிஷா 3 தெலுங்குப் படங்களில் புக் ஆகியுள்ளது இலியானாவுக்கு பெரும் அப்செட்டைக் கொடுத்துள்ளதாம்.

இதனால், திரிஷாவுக்கு ஆப்பு வைக்க தமிழ் பக்கம் போக முடிவு செய்துள்ளாராம் இலியானா. ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் நடிக்கவே மாட்டேன் என்று பிடிவாதமாக இருந்தார் இலியானா. கேட்டால், என் ரேஞ்சுக்கு தெலுங்குதான் லாயக்கு என்று ரொம்பவே பிகு செய்தார். இதனால் தமிழ்ப் படத் தயாரிப்பாளர்கள் சோகமாக இருந்தனர்.

ஆனால் திரிஷாவால் தற்போது நிலைமை மாறியுள்ளதாம். தமிழ்ப் படங்களில் வாய்ப்பு பிடிக்க தனது மேலாளருக்கு உத்தரவு போட்டுள்ளாராம். அதிலும், திரிஷாவை நாடி, கால்ஷீட் கிடைக்காத தயாரிப்பாளர்களைப் பிடித்து அந்த வாய்ப்புகளைப் பிடித்துக் கொண்டு வருமாறு மேலாளருக்கு குறிப்பாக உத்தரவிட்டுள்ளாராம்.

எப்படியோ, இலியானா கோலிவுட்டுக்கு வர திரிஷா ஒரு காரணமாக இருந்துள்ளார். எனவே திரிஷாவையும் பாராட்டுவோம், இலியானாவையும் வரவேற்போம்!

Read more about: ileana, trisha

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil