X
பக்ரீத்

பக்ரீத்

Drama | 23 Aug 2019 | U | 121 Mins
Tamil

2.5 /5 Users

3.5 /5 Filmibeat

பக்ரீத் கதை

பக்ரீத் இயக்குனர் ஜெகதீசன் ஷுப இயக்கத்தில் விக்ராந்த், வசுந்தரா நடித்திருக்கும் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் எம் எஸ் முருகராஜ் மல்லைகை தயாரிக்க, இசையமைப்பாளர் இம்மான் இசையமைத்துள்ளார். கதை சென்னைக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் விவசாயியாக இருக்கிறார் விக்ராந்த் (ரத்தினம்). விக்ராந்த்துக்கும் அவரது அண்ணனுக்கும் சொத்து பிரச்சினை. எனவே இருவரும் பேசிக் கொள்வதில்லை. நீதிமன்ற தீர்ப்புப்படி இருவருக்குமான நிலங்கள் பிரித்து கொடுக்கப்படுகின்றன. தனக்கு கிடைத்த நிலத்தில் விவசாயம் செய்ய நினைக்கிறார் விக்ராந்த். இதற்காக அதே ஊரில் இருக்கும் ஒரு இஸ்லாமியரிடம் தனது நண்பன் மூலம் நிதியுதவி கேட்டுப் போகிறார். அங்கு பக்ரீத் பண்டிகைக்கு குர்பானி கொடுப்பதற்காக ராஜஸ்தானில் இருந்து ஒரு பெரிய ஒட்டகம் கொண்டு வரப்படுகிறது. கூடவே ஒரு குட்டி ஒட்டகத்தையும் அழைத்து வந்துவிடுகிறார்கள். அந்தக் குட்டியை வெட்ட யாருக்கும் மனசு வரவில்லை. திரும்பவும் அனுப்ப முடியாது, வைத்து பராமரிக்கவும் முடியாது என்ற சூழ்நிலையில், அந்த ஒட்டகத்தை தனது வீட்டிற்கு அழைத்து வருகிறார் விக்ராந்த். அந்த ஒட்டகத்துக்கு சாரா என பெயர் வைத்து, தங்களுடைய குடும்பத்தில் ஒரு ஆளாகவே அதை வளர்க்கிறார்கள் விக்ராந்த்தும், அவரது குடும்பத்தாரும். விக்ராந்த்தின் மனைவி வசுந்தராவுக்கும், மகளுக்கும் சாராவை ரொம்பவே பிடித்து போகிறது. ஊரே தேடி வந்து ஒட்டகத்தை பார்த்துவிட்டு போகிறது. அதுவும் மற்ற கால்நடைகள் மாதிரியே புல், வேப்பிலை என சாப்பிட்டு பழகுகிறது. விக்ராந்த்தின் விவசாயம் செழித்து பொருளாதார நிலை உயர, அவருடன் சேர்ந்து சாராவும் வளர்கிறாள். கிட்டத்தட்ட 11 மாதங்கள் ஆன நிலையில் சாராவுக்கு முதல் முறையாக உடல் நிலை பாதிக்கப்படுகிறது. அதற்கு வைத்தியம் பார்க்க வரும் மாட்டு டாக்டர் எம்.எஸ்.பாஸ்கர், ஒட்டகம் ராஜஸ்தானில் இருப்பது தான் அதற்கு உகந்தது. இங்கிருந்தால் வீணாக செத்துப் போய்விடும் என பயமுறுத்துகிறார். இதனால் கவலையடையும் விக்ராந்த், சாராவை ராஜஸ்தானில் கொண்டு போய்விட முடிவு செய்கிறார். பிரிய மனமில்லாமல் ஒரு லாரியை பிடித்து அதில் சாராவை ஏற்றி கூடவே செல்கிறார். மகாராஷ்டிராவில் எதிர்பாராதவிதமாக பசு பாதுகாவலர்களிடம் சிக்குகிறார்கள் விக்ராந்த்தும், சாராவும். மிருகவதை தடுப்பு என்ற பெயரில் விக்ராந்த்திடம் இருந்து பிரிக்கப்படுகிறது சாரா. அதன்பின் நடக்கும் உணர்வுப்பூர்வமான, நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவங்கள் தான் 'பக்ரீத்'.
Read More

பக்ரீத் நடிகர்கள் & படக்குழுவினர்

பக்ரீத் அணியின் தகவல்

இயக்குனர் ஜெகதீசன் சுப்பு
ஒளிப்பதிவாளர் ஜெகதீசன் சுப்பு
தொகுப்பாளர் அன்டனி ரூபன்
இசை டி இமான்
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

பக்ரீத் விமர்சகர்களின் விமர்சனம்

பில்மிபீட்
ம்முடைய மண்ணில் இன்னும் இன்னும் எத்தனையோ சொல்லப்படாத கதைகள் புதைந்து கிடக்கின்றன. அவை நம்மை சுற்றியே தான் இருக்கின்றன. நாம் தான் அதை கவனித்து தோண்டி எடுக்க வேண்டும். அப்போது தான் அதில் உண்மைத்தன்மை இருக்கும். இதுபோல் ஒரு சில படங்கள் எப்போதாவது வந்து நம் மனதை லேசாக ஈரமாக்கிவிட்டு போகும். அப்படிப்பட்ட ஒரு வாழ்வியல் சார்ந்த படம் தான் பக்ரீத்.

பக்ரீத் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு
  • Family movie. An entertaining and heart whelming story.

  • 1st half is superb.in total good film

×
2.5 /5 Your Rating

பக்ரீத்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+