கணவரை கழட்டிவிட்ட பூனம் பாண்டே.. இவர் தான் புதிய பாய் ஃபிரண்டா.. டிரெண்டாகும் வீடியோ!
மும்பை: சர்ச்சை நடிகை பூனம் பாண்டேவுக்கும் அவரது காதல் கணவர் சாம் பாம்பேவுக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், பூனம் பாண்டே இன்று வெளியிட்ட வீடியோ ஒன்றில் அவருடன் ஒரு ஆண் நண்பர் உள்ளார்.
அதை பார்த்த நெட்டிசன்கள் இவர் தான் உங்கள் புதிய காதலரா? எப்போ திருமணம் என ஏகப்பட்ட கேள்விகளை எழுப்பி உள்ளனர்.

சர்ச்சை புயல்
பாலிவுட் நடிகை பூனம் பாண்டே நிர்வாணமாக நடித்து ஏகப்பட்ட பிரைவேட் வீடியோக்களை தனி ஆப்களில் விற்று சர்ச்சை புயலாக உருவெடுத்துள்ளார். ஆபாச புகைப்படங்களையும், வீடியோக்களையும் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் உள்ளிட்ட சோஷியல் மீடியாவிலும் பதிவிட்டு அவர் செய்த அட்ராசிட்டிக்கு அளவே இல்லை. சமீபத்தில் ஓடிடியில் ஒளிபரப்பான கங்கனா ரனாவத்தின் லாக்கப் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.

ஹனிமூனிலேயே பஞ்சாயத்து
தயாரிப்பாளர் சாம் பாம்பே உடன் படு ஆபாசமாக போட்டோக்களை வெளியிட்டு வந்த பூனம் பாண்டே, அவரை காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் அறிவித்திருந்தார். அதன்படியே அவர்கள் இருவரும் திருமணமும் செய்து கொண்டது ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. ஆனால், கோவாவுக்கு ஹனிமூன் சென்ற போதே, கணவர் தன்னை அடித்து துன்புறுத்துகிறார் என புகார் அளித்து மீண்டும் ஒரு பரபரப்பை கிளப்பினார். தற்போது இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
பக்ரீத் வாழ்த்து
கங்கனா ரனாவத்தின் லாக்கப் ரியாலிட்டி ஷோவிற்கு பிறகு மீண்டும் பாலிவுட்டில் ஏகப்பட்ட வாய்ப்புகள் மற்றும் வெப்சீரிஸ்களில் நடிக்கும் வாய்ப்புகள் நடிகை பூனம் பாண்டேவிற்கு குவிந்து வருகின்றன. இந்நிலையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் நடிகை பூனம் பாண்டே. அந்த வீடியோவில் அவருடன் ஒரு ஆண் நண்பரும் ரசிகர்களுக்கு வாழ்த்து சொல்லி உள்ளார்.
Recommended Video

புதிய காதலரா
இந்த வீடியோ வெளியானதுமே அதை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் பக்கத்தில், அடுத்த ஆடு சிக்கி விட்டதா? என்றும் இவர் உங்களுடைய புதிய பாய் ஃபிரெண்டா? என்றும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். சமீபத்தில் டிரான்ஸ்பரன்ட் ஆன மழை கோட் உடையை அணிந்து கொண்டு பூனம் பாண்டே சோளம் வாங்கி சாப்பிட்ட புகைப்படங்களும், பிரா அணியாமல் வெறும் டாப்ஸ் மட்டும் அணிந்து அவர் வெளியே சென்ற போட்டோக்களும் பெரும் சர்ச்சையை கிளப்பி நிலையில், பக்ரீத் வாழ்த்து சொல்லி இருக்கும் வீடியோவால் தற்போது புதிய பூகம்பங்கள் கிளம்பி உள்ளன.


Click it and Unblock the Notifications











