X
ஜாக்பாட்

ஜாக்பாட்

Action | Comedy | 02 Aug 2019 |
Tamil

2.5 /5 Users

3 /5 Filmibeat

ஜாக்பாட் கதை

ஜாக்பாட் இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் ஜோதிகா மற்றும் ரேவதி நடித்த நகைச்சுவை திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளரும் தமிழ் திரைப்பட முன்னணி நடிகரான சூர்யா தனது 2டி தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். கதை இந்த கதையை சொல்லத் தொடங்க வேண்டுமானால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பயணிக்க வேண்டும், என தசாவதாரம் கமல் ரேஞ்சுக்கு ஒரு பெரிய பிளாஷ் பேக்குடன் ஆரம்பமாகிறது படம். அள்ள அள்ளக் குறையாத 'அட்சய பாத்திரம்' என ஒரு பாத்திரத்தை பற்றி புராணங்களில் கேள்விப்பட்டிருக்கீங்கள்ல, அது தான் இந்த படத்தின் ஜாக்பாட். பல பேர் கை மாறி ஒரு ஏழை பால்காரரிடம் வந்து சேர்கிறது அந்த அட்சய பாத்திரம். அதை வைத்து அவர் பெரிய பணக்காரராக உயர்கிறார். அந்த பாத்திரத்தை அவருடைய வீட்டில் இருந்து இரண்டு திருடர்கள் ஆட்டயப் போடுகிறார்கள். தப்பிச் செல்லும் போது ஒரு ஆற்றில் அந்த பாத்திரம் விழுந்துவிடுகிறது. பின்னர் ஓர் இடத்தில் கரை ஒதுங்கும் பாத்திரத்தை 'குமாரி' சச்சு கண்டெடுக்கிறார். அதில் நூறு ரூபாய் நோட்டை போட்டவுடன் அது பல மடங்காகிறது. பாத்திரத்தை ஆனந்த்ராஜ் வீட்டு மாட்டுக்கொட்டகையில் புதைத்துவிட்டு, பேங்க்கு போகும் சச்சு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். ஏனென்றால் அட்சய பாத்திரத்தில் இருந்து அவர் எடுத்த அத்தனை நோட்டுகளும் ஒரே சீரியல் நம்பரில் இருக்கின்றன. இந்த கதையை அவருடன் சிறையில் இருக்கும் ஜோதிகா மற்றும் ரேவதியிடம் சொல்கிறார் சச்சு. ஜோதிகாவும், ரேவதியும் ஊருக்குள் பலரை ஏமாற்றி, மொள்ளமாரித்தனம் செய்து, கேப்மாரியாக வாழ்கிறவர்கள். உடனே அந்த அட்சய பாத்திரத்தை ஆனந்த்ராஜ் வீட்டில் இருந்து ஆட்டயப் போட திட்டம் போடுகிறார்கள். அது ஒர்க்கவுட் ஆகி அவர்களுக்கு ஜாக்பாட் அடித்ததா? இல்லையா? என்பதே கலகல மீதிக்கதை.
Read More

ஜாக்பாட் நடிகர்கள் & படக்குழுவினர்

ஜாக்பாட் அணியின் தகவல்

இயக்குனர் எஸ் கல்யாண்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை விஷால் சந்திரசேகர்
தயாரிப்பாளர் சூர்யா சிவகுமார்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

ஜாக்பாட் விமர்சகர்களின் விமர்சனம்

பில்மிபீட்
ஒரு வரியில் எழுதிவிடக் கூடிய கதையை இரண்டரை மணி நேர படமாக, சுவாரஸ்யம் குறையாமல் எடுக்கும் திறமை இயக்குனர் கல்யாணுக்கு நிறைய இருக்கு. முதல் பாதியில் ஆனந்த்ராஜ் அண்ட் கோவுடன், ஜோதிகாவும், ரேவதியும் சேர்ந்து செய்யும் ரகளைகள் சிரிப்பு மத்தாப்பூ. ஆனந்த்ராஜ் அண்ட் கோவில் உள்ள கோகோ டோனி அசால்ட்டா சிரிக்க வைக்கிறாரு. ப்ப்பா... சின்ன சின்ன டயலாக்ஸ் தான். ஆனா குபீர்ன்னு சிரிப்பு வருது. பழைய ஜோக் தங்கதுரை, மன்சூர் அலிகான், மொட்ட ராஜேந்திரன் என எல்லோருமே காமெடிக்கு கேரண்டி தருகிறார்கள். இருந்தாலும் இது ஜோதிகா ரசிகர்களுக்கு சரியான 'ஜாக்பாட்' தான்.

ஜாக்பாட் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

ஜாக்பாட்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+