X
ஜருகண்டி

ஜருகண்டி

Action | 26 Oct 2018 |
Tamil

3.1 /5 Users

2.5 /5 Filmibeat

ஜருகண்டி கதை

ஜருகண்டி தமிழ் அதிரடித் திரைப்படம். இத்திரைப்படத்தினை பிச்சுமணி இயக்க, ஜெய், ரெபா மோனிகா ஜான் மற்றும் அமித் குமார் திவாரி நடித்துள்ளனர். இப்படத்திற்கு போபோ சசி இசையமைத்துள்ளார்.  கதை :  கார் சீசிங் வேலை செய்யும் நாயகன் ஜெய்க்கு, சொந்தமாக டிராவல்ஸ் ஆரம்பிக்க வேண்டும் என்பது லட்சியம். வங்கியில் லோன் கிடைக்காததால், நண்பன் டேனி மூலம் அறிமுகமாகும் இளவரசுவை வைத்து தவறான பாதையில் கடன் பெறுகிறார். அந்த விஷயம் காவல்துறை அதிகாரி போஸ் வெங்கட்டுக்கு தெரியவர, ஜெய்யையும், டேனியையும் மிரட்டி பணம் பறிக்க முயல்கிறார். மீண்டும் பணத் தேவையில் சிக்கும் ஜெய், நாயகி ரெபா மோகினாவை தற்செயலாக கடத்தி பணம் கேட்டு மிரட்டுகிறார். ஆனால் அதுவே அவரை பெரும் சிக்கலில் மாட்ட வைக்கிறது. அதில் இருந்து ஜெய் எப்படி தப்பிக்கிறார் என்பதே படம் .
Read More

ஜருகண்டி நடிகர்கள் & படக்குழுவினர்

ஜருகண்டி அணியின் தகவல்

இயக்குனர் பிச்சுமணி
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை NA
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

ஜருகண்டி விமர்சகர்களின் விமர்சனம்

tamil.filmibeat.com
சின்ன சின்ன டிவிஸ்டுகள், நிறைய கலாய் காமெடி, சேசிங், அதிரடி ஆக்ஷன் என ஒரு முழுநீள கமர்சியல் படத்தை தந்திருக்கிறார், வெங்கட் பிரபுவிடம் உதவியாளராக பணியாற்றி, ஜருகண்டி மூலமாக இயக்குனராக அறிமுகமாகி இருக்கும் பிச்சுமணி. குருநாதரை போலவே ஒரு சின்ன கான்செப்ட்டை கையில் வைத்துக்கொண்டு, விறுவிறுப்பான படத்தைத் தந்திருக்கிறார். ஜெய்யை மாஸ் ஹீரோவாக புரோமோட் செய்ய அவரது நண்பரும் தயாரிப்பாளருமான நிதின் சத்யா முயற்சித்திருக்கிறார். ஜெய்க்கு நிறைய ஆக்ஷன் காட்சிகள் இருக்கின்றன. ரொம்ப ரிஸ்க் எடுக்காமல் அசால்டாக சண்டைக் காட்சிகளிலும் முகபாவனையை வைத்து மட்டுமே சமாளிக்க முயற்சித்திருக்கிறார். ரொமான்ஸ் காட்சிகளில் வழக்கமான அப்பாவி தான். பகவதியில் ஆரம்பித்து ஜருகண்டி வரை ஒரே மாதிரியான டயலாக் டெலிவரி ஜெய். பாஜக தமிழிசை சௌந்தரராஜன், மெர்சல் விஜய் என செம போல்ட் கலாய்கள் படத்தில் நிறைய இருக்கின்றன. டேனியும், ரோபோ சங்கரும் காமெடிக்கு நிறையவே மெனக்கெட்டிருக்கிறார்கள். ஓரளவுக்கு ஒர்கவுட்டும் ஆகியிருக்கிறது. போபோ ஷஷியின் பாடல்கள் கேட்கும் ரகத்தில் இருக்கின்றன. ஆனால் பின்னணி இசையில் அருமையான பங்களிப்பை தந்திருக்கிறார். மேகராமேன் ஆர்.டி.ராஜசேகர் தன்னால் முடிந்த அளவிற்கு படத்தை மெருகேற்றி இருக்கிறார். படத்தை வேகத்தை கூட்ட எடிட்டர் பிரவீன் கே.எல். இன்னும் கொஞ்சம் முயற்சித்திருக்கலாம். நாயகன் ஜெய்யின் கதாபாத்திரம் புத்திசாலித்தனமாக யோசித்து பிரச்சினைகளை தீர்க்கக் கூடியதா அல்லது அதிரடியாக இறங்கி அடித்து பிரச்சினையை முடிப்பா என்பதை முடிவு செய்ய முடியாமல் இயக்குனர் நிறையவே குழம்பி இருக்கிறார். விடுமுறை நாட்களில் வீட்டில் போரடிக்கிறது என புலம்புபவர்கள் இந்த படத்துக்கு ஜருகண்டி... ஜருகண்டி.

ஜருகண்டி திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
3.1 /5 Your Rating

ஜருகண்டி

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+