X
கொளஞ்சி

கொளஞ்சி

Drama | Family | 26 Jul 2019 | U | 117 Mins
Tamil

2.5 /5 Users

2.5 /5 Filmibeat

கொளஞ்சி கதை

கொளஞ்சி இயக்குனர் தனராம் சரவணன் இயக்கத்தில், சமுத்திரக்கனி மற்றும் சங்கவி இணைந்து நடித்த குடும்ப திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளராக மூடர் கூடம் திரைப்படத்தின் இயக்குனர் நவீன் தயாரிக்க, இசையமைப்பாளர் நடராஜன் சங்கரன் இசையமைத்துள்ளார். மகன் மற்றும் அப்பாவின் பாசத்தை கதைக் கருவாக கொண்டு உருவாகும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் விஜயன் முனுசாமி மற்றும் படத்தொகுப்பாளர் அதியப்பன் சிவா இணைந்து பணியாற்றியுள்ளனர். கதை இப்படத்தின் நாயகன் சமுத்திரக்கனி தனது மனைவி சங்கவி உடன் மகிழ்ச்சியாய் வாழ்ந்து வருகிறார், இவர்களுக்கு 2 புதல்வர்கள் உண்டு. இவர்களின் முத்த மகன் சிறு பிள்ளைத்தனமாக செய்யும் சேட்டைகள் சமுத்திரக்கனிக்கு ஊருக்குள் அவப்பெயரை உண்டாக்குகிறது. அதனால் சமுத்திரக்கனி மூத்த மகனிடம் சற்று கண்டிப்பாக நடந்து கொள்கிறார். தன்னிடம் கண்டிப்பாகவும், தம்பியிடம் பாசமாக இருக்கும் சமுத்திரக்கனி-யின் மேல் மூத்த மகனுக்கு கோபம் அதிகரிக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் சண்டையால் பிரியும் சமுத்திரக்கனி - சங்கவி தம்பதியினர் மூத்த மகனை அம்மாவும், இளைய மகனை அப்பாவும் பிரித்து கொண்டு செல்கின்றனர். தன் அப்பாவை விட்டு தனியாக அம்மாவுடன் வாழும் மூத்த மகன் அப்பாவை புரிந்துகொண்டு மீண்டும் இக்குடும்பம் ஒன்று சேர்வதே இத்திரைப்படத்தின் கதை.
Read More

கொளஞ்சி நடிகர்கள் & படக்குழுவினர்

கொளஞ்சி அணியின் தகவல்

இயக்குனர் தனராம் சரவணன்
ஒளிப்பதிவாளர் விஜயன் முனுசாமி
தொகுப்பாளர் அதியப்பன் சிவா
இசை நடராஜன் சங்கரன்
தயாரிப்பாளர் நவீன் (இயக்குனர்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

கொளஞ்சி விமர்சகர்களின் விமர்சனம்

பில்மிபீட்
நீண்ட நாட்களுக்கு பிறகு வெள்ளித்திரையில் சங்கவி. ஒரு காலத்தில் கிளாமர் ஹீரோயினாக விஜய், அஜித்துடன் ஜோடிபோட்டவர், இரண்டு பிள்ளைகளின் தாயாக, அன்பான மனைவியாக நிறைவாக நடித்திருக்கிறார். இனி சங்கவியை நிறைய படங்களில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் என்றே தோன்றுகிறது. படத்தின் ஷோ ஸ்டீலர்ஸ், கிருபாவும் நசாத்தும் தான். கொளஞ்சி கேரக்டருக்கு கிருபா செம பிட். வாட் சொல்லிங் நண்பா என ஆங்கிலமும் தமிழும் கலந்து நசாத் பேசும் வசனங்கள் காமெடி வெடி. எனது ரோல் இது தான் என்பதை உணர்ந்து அளவாக நடித்து அப்ளாஸ் வாங்குகிறார் ராஜாஜ். ஹீரோயின் நைனாவுக்கும் ஒரு சபாஷ் பார்சல். படத்தின் தயாரிப்பாளர் என்பதால், ஒரு காட்சியில் மட்டும் தலைக்காட்டிவிட்டு நகர்கிறார் மூடர் கூடம் நவீன். ஸ்பெஷல் அப்பியரன்ஸ் சென்ராயன், வடிவேலு ஸ்டைலில் டான்ஸ் எல்லாம் ஆடியிருக்கிறார். ஆனால் ரசிக்க தான் முடியவில்லை.

கொளஞ்சி திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு
  • when release this movie

×
2.5 /5 Your Rating

கொளஞ்சி

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+