»   »  கொளஞ்சி... 12 வயது சிறுவனுக்கும் அப்பாவுக்குமான பாசப் போராட்டம்!

கொளஞ்சி... 12 வயது சிறுவனுக்கும் அப்பாவுக்குமான பாசப் போராட்டம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மூடர் கூடம் படத்தைத் தயாரித்து இயக்கிய நவீன் அடுத்து புதிய படம் ஒன்றைத் தயாரிக்கிறார். ஆனால் இயக்குபவர் வேறு.

கொளஞ்சி என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை நவீன் தனது ஒயிட் ஷேடோஸ் நிறுவனம் மூலம் தயாரிக்க, சிம்புதேவன் மற்றும் நவின் ஆகியோர்களிடம் பணியாற்றிய தனராம் சரவணன் இயக்குநராக அறிமுகமாகிறார்.

Kolanji, a movie on Son - Father relationship

தன் இஷ்டம் போல் வாழ நினைக்கும் 12 வயது சிறுவனுக்கும், பிள்ளைகளை ஒழுக்கமாக வளர்க்க வேண்டும் என நினைக்கும் அப்பாவுக்கும் இடையே நடக்கும் பாசப் போராட்டமும் இதனால் ஏற்ப்படும் விளைவுகளும்தான் 'கொளஞ்சி' படத்தின் கதை, என்கிறார் சரவணன்.

அப்பா வேடத்தில்... வேறு யார் சமுத்திரகனிதான் நடிக்கிறார்.

Kolanji, a movie on Son - Father relationship

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சங்கவி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் ராஜாஜி, நேனா சர்வார், கிருபாகரன், நசாத், ரஜின்.எம், பிச்சைகாரன் மூர்த்தி, ருஜீல் கிருஷ்ணா, நாடோடிகள் கோபால், ரேகா சுரேஷ், ஆதிரா ஆகியோர் நடிக்கின்றனர்.

Kolanji, a movie on Son - Father relationship

ராசிப்புரம், கோக்கராயன் பேட்டை போன்ற பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.

தற்போது "கொளஞ்சி" படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடந்துவருகின்றன.

Kolanji, a movie on Son - Father relationship
Read more about: kolanji, naveen, கொளஞ்சி
English summary
Moodar Koodam is producing a new movie directed by debutant Dhanaram Saravanan titled Kolanji.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil