»   »  இளம் இயக்குநர் வாழ்க்கைக்கு முட்டுக்கட்டை போட்ட மூடர்கூடம் நவீன்!?

இளம் இயக்குநர் வாழ்க்கைக்கு முட்டுக்கட்டை போட்ட மூடர்கூடம் நவீன்!?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மூடர்கூடம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநர் என்று அடையாளப் படுத்தப்பட்டவர் நவீன். படம் முழுக்க...ப்ளாக் ஹ்யூமர், சட்டையர் வசனங்கள் என கவனம் ஈர்த்தவர்! உதாரணத்திற்கு ஒன்று- 'எடுக்கிறவன் மட்டுமில்லை; எடுக்கவிடாமல் தடுக்கிறவனும் திருடன்தான்!'

இந்த வசனம்,கால ஓட்டத்தில் அவருக்கே பொருந்திவிட்டதை என்னவென்று சொல்ல!? சமுத்திரக்கனி, 'அப்பா', 'தொண்டன்' படங்கள் பற்றி யோசிப்பதற்கு முன்பே, அப்பா - மகன் உறவுச் சிக்கலை வைத்து ஒரு கதை உருவாகியவர் சரவணன். இயக்குநர் சிம்புதேவனிடம் உதவியாளராக இருந்தவர் இவர்.


Moodar Koodam Naveen stops Kolanji

கதை பிடித்துப்போக, இதைத் தயாரிக்க முன் வருகிறார் மூடர்கூடம் நவீன். படத்திற்குப் பெயர் 'கொளஞ்சி'. ஹீரோ சமுத்திரக்கனி, ஹீரோயின் சங்கவி, இன்னொரு அறிமுக ஹீரோ என மொத்தப்படத்தையும் ஐம்பது லட்சத்திற்கும் குறைவான பட்ஜெட்டில் படத்தை முடித்துக் கொடுத்துவிட்டார் அறிமுக இயக்குநர் தனராம் சரவணன். 'மூடர்கூடம் நவீன்' தயாரிப்பில் உருவான படம் என்பதால் பரபரப்புக்குப் பஞ்சமில்லை. படமும் பிரமாதமாக வந்திருக்கிறது. அவ்வப்போது ரிலீஸ் தேதி அறிவிப்பார்கள். அப்பறம் வெளியாவதற்கான சுவடே இருக்காது!


என்னதான் பிரச்சினை? தயாரிப்பாளர் நவீனின் பேராசைதான்! ஐம்பது லட்சத்திற்கு குறைவான பட்ஜெட்டில் தயாரான படத்தை, இரண்டரைக் கோடி ரூபாய்க்கு தமிழ்நாடு திரையரங்க உரிமை மட்டும் கொடுத்திருக்கிறார். அதில் பாதிப்பணம் அட்வான்ஸாக தந்துவிட்டதாம். தவிர, ஓவர்சீஸ், டிஜிட்டல் மார்கெட் என ஏகத்துக்கும் காசு பார்த்துவிட்டார். படத்தின் உரிமையை வாங்கியவர்கள் சினிமாவுக்குப் புதியவர்கள். ரிலீஸ் செலவு வட்டி எல்லாம் கணக்குப் பார்த்தால், ஐந்து கோடிக்கு மேல் வியாபாரம் பண்ணினால்தான் படத்தை ரிலீஸ் பண்ணமுடியும். அவ்வளவு வியாபாரம் இல்லாததால் வாங்கியவர்கள் மண்டை காய்ந்து போயிருக்கிறார்கள்.


Moodar Koodam Naveen stops Kolanji

மூடர்கூடம் நவீனோ, போட்டதைவிட அதிக லாபம் பார்த்தாச்சு என்று விட்டேத்தியாக இருக்கிறாராம். மொத்த உழைப்பையும் கொடுத்த இயக்குநர் தனராம் சரவணன், கண்ணீரோடு கோடம்பாக்கத்தை வலம் வருகிறார்.


'வழி நம்ம முன்னாடிதான் இருக்கு... நாமதான் நடக்கணும் பாஸ்'என்று மூடர்கூடத்தில் வசனம் வைத்த படைப்பாளி, இப்படி முட்டுக்கட்டை போடுறது நல்லாவா இருக்கு?!


- வீகேஎஸ்

Read more about: kolanji, naveen, கொளஞ்சி
English summary
Sources say that Moodar Koodam Naveen is blocking Kolanji movie from its release.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil